(Reading time: 6 - 12 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

இருக்காங்க! நீங்களும், அவங்களைவிட, சீக்கிரமாவே உயர்ந்து எங்கேயோ போயிடுவீங்க! சரி, நீ கல்யாணம் ஆகாத பொண்ணு! ஊருக்கு புதுசுன்னு நினைக்கிறேன், இனிமே இந்தமாதிரி யாராவது எதையாவது சொல்லி கூப்பிட்டாங்கன்னு, கூடவே போகாதீங்க! இந்த ஊரு ரொம்ப கெட்டுப்போச்சு! இந்த வயசானவன் சொல்றதை கெட்டியா மனசிலே பதிய வைச்சுக்குங்க!"

 " எனக்கும் உங்களைப் பார்த்தால், என் தாத்தா ஞாபகம் வருது!"

 " அப்படியா! ரொம்ப சந்தோஷம்! எனக்கும் நீ ஒரு பேத்தி மாதிரி! நீ ரொம்ப அழகாயிருக்கே! அழகுன்னா, சாயம் பூசின மேக்அப் அழகு இல்லே, இயற்கையான அழகு! தெய்வீக முகம்! கையெடுத்து கும்பிட தோணுது! சரி, உன்னைப் பற்றி விவரமா சொல்லு!"

 " நான் காளியாகுடி கிராமத்திலே வளர்ந்த பொண்ணு! இன்றுதான் இங்கே வந்து, எங்க ஊர்க்கார தாத்தா வீட்டிலே தங்கியிருக்கேன்......அவரு தனியா இருக்காரு, அவர் மகன் அமெரிக்காவிலே செடில் ஆயிட்டாரு....."

 "அங்கெல்லாம் தங்காதே! காலம் கெட்டுக் கிடக்கு, தனியா ஒரு ஆம்பிளையோடு, உன்னை மாதிரி அழகான பொண்ணு தங்கக்கூடாது! அவர் நல்லவராயிருந்தாலும், ஊர் வம்பு பேசும்.

 என் வீட்டிலே என் குடும்பமே இருக்கு! என் மனைவி, என் மகள், உன் வயசிலே என் பேத்தி எல்லாரும் இருக்காங்க! உன்னை நல்லபடியா பார்த்துப்பாங்க! என் வீட்டிலே தங்கிக்கோ! என் படத்திலே நீ நடித்தாலும் நடுக்காவிட்டாலும், நீ தங்கலாம். உன்னை எனக்கு ரொம்ப பிடித்துப் போச்சு! உன் முகத்திலே என் தாய் மீனாட்சி அம்மன் களை கொட்டுது!"

 " அப்படியா! உங்களுக்கு ஏன் வீண் உபத்திரவம்? நான் எங்க ஊர்க்கார கிழவரோடயே தங்கிக்கிறேன்......"

 " அப்புறம் உன் இஷ்டம்! சரி, நான் எடுக்கப் போகிற படம், புராணப் படம்! சிவனும் பார்வதியும் முக்கியமான கேரக்டர்கள்! உனக்கு பார்வதியா நடிக்க சம்மதமா? பத்து கோடி ரூபா சம்பளம்! மொத்த பட்ஜெட் இருநூறு கோடி ரூபாய்! இரண்டு வருஷத்திலே தியேட்டருக்கு வந்துவிடும்.

 சிவன் ரோலுக்கு பிரபல நடிகர், வசந்தன் புக் ஆயிட்டார்! டைரக்டர் காளிதாசன்! சரி, உனக்கு சினிமா பிடிக்குமா? பார்த்திருக்கியா? உங்க கிராமத்திலே தியேட்டர் இருக்கா? டெண்ட் கொட்டகையாவது இருக்கா?"

 " எதுவுமே கிடையாது! நான் சினிமாவே பார்த்ததில்லே........."

 " அதெல்லாம் பரவாயில்லை. நாங்க எல்லாம் சொல்லித் தரோம்.

முதல்லே, மேக்அப் டெஸ்ட் பார்த்துடுவோம்!......."

 டெலிபோனிலே யாரையோ அழைத்துப் பேசினார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.