(Reading time: 8 - 15 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 09 - ரவை

சந்தா வீடு திரும்பியதும், தாத்தா ஓடிவந்து அவளை வரவேற்றார்!

 " ஏம்மா, இத்தனை லேட்டா வரே? எனக்கு உடம்பே பதறிப் போச்சும்மா! நீயோ ஊருக்கு புதுசு! சின்னப் பொண்ணு! ஊரோ கெட்டுக்கிடக்கு! ஏம்மா! நீ சாப்பிட்டியா? இல்லேன்னா, சொல்லும்மா! இப்பவே சமையல் செய்யறேன்....."

 " தாத்தா! நீங்க ரொம்ப நல்லவர், இளகிய மனசு! என்னை உங்க பேத்தியாவே நினைச்சு பாசத்தைக் கொட்டறீங்க!

 தாத்தா! உங்களுக்காக நான் இனிமேல், வெளியிலே போகாம, உங்களோடேயே இருக்கேன், நானே சமைக்கிறேன்.......நாம பேசிக்கொண்டே இருப்போம்......."

 " சரி, நீ போன காரியம் என்னாச்சு?"

 " நாவலுக்கு கரு கிடைச்சாச்சு! மற்ற சின்னச் சின்ன விஷயங்களை உங்களிடமிருந்து தெரிஞ்சிக்கிறேன், நான் நினைத்ததைவிட சீக்கிரமாவே வந்த வேலை முடிஞ்சிடுத்து! நாளைக்கு ஊருக்கு திரும்பிடலாம்னு நினைக்கிறேன்........."

 " நல்லதும்மா!"

 " தாத்தா! நீங்க சாப்பிட்டீங்களா?"

 " ரெண்டு வேளை சாப்பாடும் முடிஞ்சு, டி.வி. பார்த்துக்கிட்டிருக்கேன், வா! உட்கார்! பேசிக்கொண்டிருப்போம்!"

 வசந்தா உள்ளே போய் தாகத்துக்கு தண்ணீர் குடித்துவிட்டு தாத்தாவின் அருகில் அமர்ந்தாள்.

 " தாத்தா! இன்றைய செய்தித்தாள் எங்கே இருக்கு? நீங்க படிச்சிட்டீங்களா?"

 " டேபிள்மேலே இருக்கும்மா! எனக்கு காலையிலே முதல் வேலை பேப்பர் படிக்கிறதுதாம்மா!"

 " ஏதாவது விசேஷமா செய்தி உண்டா?"

 " இந்த பேப்பர்காரங்களுக்கு, எது செய்தி தெரியுமா? விண்வெளியிலே ராக்கெட் அனுப்பி உலக சாதனை படைக்கிறதெல்லாம் இல்லே, அதை கடைசி பக்கத்திலே சின்ன எழுத்திலே போடுவாங்க, ஆனா, முதல் பக்கத்திலே கொட்டை எழுத்திலே, ஊரிலே நடக்கிற பலாத்கார கற்பழிப்பு, மாணவர்களிடையே கைகலப்பு, எதிர்கட்சிக்காரங்க ஆளுங்கட்சியை திட்டறது, பேங்கிலே கோடிக்கணக்கிலே கடன் வாங்கிண்டு வெளிநாடு ஓடிப்போனது இப்படிப்பட்டதுதாம்மா செய்தி!"

 " தாத்தா! கோவில் கும்பாபிஷேகம், மாணவர்கள் ஆராய்ச்சி செய்து புதுசா கண்டுபிடிக்கிறது, எல்லைப்போரிலே நம்ம படைகள் எதிரியை துரத்தியடித்தது இதெப் போட்டால், காசு கொடுத்து பேப்பரை யாரும் வாங்கமாட்டாங்க! விளம்பரங்கள் கிடைக்காது! பணம் கிடைக்காது!"

 " நீ சொல்றதும் சரிதான். இந்த நிலமையை மாற்ற நினைக்கவேண்டாமா? அரசாங்கம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.