(Reading time: 8 - 15 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

கொள்கிறோம், வாய்க்குள்ளே நன்றாக மென்று தின்று, தொண்டைக்கு கீழே, அதை இறக்குகிறோம், சரியா?

 அப்படி இறங்கிய உணவு, பிறகு என்ன ஆகுது, எப்படி ஜீரணமாகுது, எப்படி ரத்தமாகுது என்பதெல்லாம் சாதாரண மனிதன் தெரிஞ்சிக்க அவசியமில்லைன்னு ஆண்டவன் அவனுக்கு அந்த அறிவை தரவில்லை!

 உடல் உறுப்புகளுக்கு உத்தரவு போட்டு வேலை வாங்குகிற பணியை மூளைக்கு கொடுத்தான். மூளை அப்பப்போ இடுகிற உத்தரவின்படி உறுப்புகள் இயங்குகின்றன.

 அப்படிப்பட்ட மூளைக்குக்கூட, ஒரு அளவு வைச்சிருக்கான்.

 'பிரெயின் டெட்'ஆன மனிதன், அதாவது கோமாவிலே இருக்கிறவன், எப்படி உயிர் வாழ்கிறான், செத்துப் போவதில்லை என்பது மூளைக்கு தெரியாது!

 நான் இப்ப சொன்னதெல்லாம் சராசரி மனிதனுக்குத்தான்!

 இதைவிட சற்று கூடுதலாக, டாக்டர்கள் ஆராய்ச்சி செய்து படித்து தெரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு சற்று கூடுதலாகத் தெரியும்.

 ஆனா, அந்த டாக்டருக்கும் அளவுண்டு. மனித உடலைப்பற்றி தெரிந்திருக்கிற அளவுக்கு அவனுக்கு கம்ப்யூடர் பற்றியோ, நிர்வாகத்தைப்பற்றியோ, ஃபைனான்ஸ் பற்றியோ, வியாபாரம் பற்றியோ, அவ்வளவு ஏன், அவன் மனைவி சுலபமா தினமும் செய்கிறாளே சமையல், அதைப் பற்றியோ தெரியாது!

 எல்லாம் தெரிந்தவன், அந்தப் பரமன்தான்!

 நமக்கு எல்லாம் தெரியக்கூடாது என்கிற எண்ணமில்லை, பரமனுக்கு!

 நாமும் தெரிந்து கொள்ள வழி வைத்திருக்கிறான். எப்படி? மனிதன் தன் மனதை செயலற்றதாக்கிவிட்டு, அறிவை சிதறவிடாமல் ஒருமனப்படுத்தி யோக நிலையில் பயிற்சி செய்தால், மனிதனுக்கும் எல்லாம் தெரியும்!

 ஆனால், அப்போதுகூட, பரமன் தனது பொறுப்புகளை வேறு எவரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்வதோடு சரி, தன்னிச்சையாக செயல்பட முடியாது.

 பரமனைத் தவிர, வேறு எவருக்கும் அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாது!

 எது, ஏன், எங்கே, எப்படி நடக்கிறது என்பதை பரமனே முடிவு செய்கிறான்.

 உலகில் நடக்கிற எல்லாவற்றுக்கும் பரமனே பொறுப்பு! அதை நம்புவதே சிறப்பு!

 பரமனும் எந்தச் சூழ்நிலையிலும் தான் படைத்தவைகளுக்கு துரோகம் செய்யமாட்டான். தாய்க்குப் பிள்ளைகள் போல, பரமனுக்கு அவன் படைப்புகள்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.