(Reading time: 8 - 15 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

 சரி, எங்கெங்கோ போய்விட்டேனே, எல்லாம் பரமனின் விளையாட்டு! அழகாகச் சொன்னான், கவிச் சக்கரவர்த்தி கம்பன்! 'அலகிலா விளையாட்டுடையான்'னு பரமனை பாடினான்.

 இவ்வளவு நான் பேசுவதும், பரமன் உத்தரவு! அவன் என்னை இயக்கி பேசவைக்கிறான்! உன்னை இயக்கி கேள்வி கேட்கவைக்கிறான்.

 இங்கு, இப்போ, நம்மிடையே நடப்பதற்கு காரணத்தை பரமனே அறிவான்! நீ யார், நீ ஏன் இங்கு வந்தாய், என்பது எதுவும் எனக்கு தெரியாது.

 நாடகத்தின் சூத்ரதாரி, பரமன்தான்!....."

 " தாத்தா! ரொம்ப சாமர்த்தியமா பேசி, மனிதனுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, அவனால் தன்னிச்சையாக நல்லதோ, கெட்டதோ எதையும் செய்யமுடியாது, நல்லது எது, கெட்டது எது என்பதும் நமக்கு தெரியாதுன்னு பேசி, எல்லாத்துக்கும் பரமன்மீது பாரத்தைப் போட்டு நீங்க தப்பிச்சுக்கிறீங்களே, அந்தப் பரமன் தாங்குவானா?"

 தாத்தா சிரித்தார்.

 " வசந்தா! இருக்கிற இடத்திலிருந்தே ஈரேழு பதினான்கு லோகத்தையும் ஆட்டிப் படைக்கிறவன், பரமன்! இதை புரிந்துகொள்ள நமக்கு சில சங்கேதங்களை காட்டுகிறான்.

 நேற்று புரியாத விஷயங்கள் இன்று சிலருக்குப் புரியவைத்து, அவர்கள் மூலமாக நாம் தெரிந்து வியப்படையும்போது, என்ன சொல்கிறோம்? 'எல்லாம் அவன் செயல்' என்கிறோம்!"

 " தாத்தா! எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தயாராக வைத்திருக்கீங்கிளே, எப்படி தாத்தா?

 "எல்லாம் அவன் செயல்!"

 " போச்சுடா! சரி, எனக்கு தூக்கம் வருது! தூங்கப்போறேன்! தாத்தா! நாளைக்கு காலையிலே சீக்கிரமாவே கிளம்பி ஊருக்கு போகிறேன், இப்பவே சொல்லி விடை பெறுகிறேன். உங்களை தூக்கத்திலே எழுப்பமாட்டேன்....."

 " இந்தக் கிழவனுக்கு ஏதும்மா ஆழ்ந்த உறக்கம்? நான் உனக்கு முன்னாடியே எழுந்து, அடுப்பு மூட்டி, பாலைக் காய்ச்சி, காபி ரெடி பண்ணிடறேன், ஒரு மடக்கு குடிச்சிட்டு கிளம்பு!

 வசந்தா! இந்த தாத்தாவை மறந்துடாதேம்மா!"

 " தாத்தா! நீங்க நம்புகிற பரமன் அதையும் பார்த்துப்பான்னு நம்புங்க!"

 " பலே! என்னையே மடக்கிட்டியே!...."

இதன் அடுத்த பகுதியுடன் இந்தக் கதை முற்றுப் பெறும்

தொடரும்

Episode # 08

Next episode will be published on 14th Apr. This series is updated weekly on Tuesday mornings.

Go to Idhu namma naadunga story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.