(Reading time: 8 - 15 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

எத்தனையோ நல்லது செய்கிறாங்க, அதை எடுத்துச் சொல்லலாமே! ஞானிகளும் பெரியவங்களும் எத்தனையோ நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்காங்க, அதை சொல்லி நாட்டை திருத்தலாமே!"

 " ஆமாம் தாத்தா! நல்ல யோசனை! சரி, தாத்தா! இப்ப இந்த நாட்டின் போக்கைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? எல்லாம் சரியா இருக்கா? எல்லாம் கெட்டுப் போச்சா? இல்லே, இரண்டும் கலந்திருக்கா? கலந்திருந்தால், எது அதிகம்? காபி ஒரு டம்ளர் கலந்தால், அதிலே காபித்தூள் ஒரு ஸ்பூன், சர்க்கரை ஒரு ஸ்பூன், மீதி முக்கால் பகுதிக்கு மேலே பால்! அது மாதிரியா? அப்படின்னா, அதிலே எது பால்? எது காபித்தாள், எது சர்க்கரை?........"

 " இரு, இரு! எனக்கு வயசாயிடுத்தில்லே, ஒரே நேரத்திலே நிறைய விஷயங்களை புத்தியினாலே கிரகிக்க முடியாது!

 முதல்லே, உன்னுடைய ஆராயும் அறிவை ரொம்ப பாராட்டறேன். இப்படித்தான், நம்ம பிரச்னை என்னங்கிறதை தெளிவா புரிஞ்சிக்கிட்டா, உண்மையிலே பிரச்னையே இல்லை, நம்ம குழப்பம்தான் பிரச்னையா பூதாகாரமா தெரியுதுங்கறது, புரிஞ்சிடும்.."

" தாத்தா! ரொம்ப புகழாதீங்க, குளிருது!"

 " வசந்தா! சரி, நீ

கேட்ட கேள்விக்கு ஒவ்வொன்றாக எனக்கு தெரிந்ததை சொல்றேன்!

 நல்லது, கெட்டதுன்னு ரெண்டு சொற்கள் உபயோகப்படுத்தினே! இவ்வளவு வயசாகியும் எனக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு தெரியலே!

 பாரதியே பாடினான், 'நல்லது தீயது நாமறியோம், அன்னை! நல்லதை நாட்டுக, தீயதை ஓட்டுக!'ன்னு பாடினான்.

 மனிதனின் அறிவு, புரிந்துகொள்கிற சக்தி, ரொம்ப ரொம்ப குறைவு!

 இது படைப்பின் அமைப்பு! மேலே இருந்து ஆக்கல், காத்தல், அழித்தல். எல்லாத்தையும் கவனிச்சிக்கிறானே அந்த பரமசிவன், ஆட்டுக்கு வாலை அளந்து கொடுப்பான்னு சொல்வாங்க!

 அவன் ரொம்ப நியாயமா, தான் படைத்து, காத்து, அழிக்கிற உலகத்திலே நடக்கிற எதற்குமே, படைக்கப்பட்டவைகளை பொறுப்பாக்குவதில்லை! தானே எல்லா பொறுப்பையும் ஏத்துக்கிறான்.

 அந்த பொறுப்பிலே ரொம்ப ரொம்ப சிறிய அளவிலே, சும்மா தமாஷுக்கு, மனிதனுக்கு கொடுத்திருக்கான், அதற்கு எந்த அளவு தேவையோ, அந்த அளவுக்கு புத்தியை, அறிவைத்தான் மனிதனுக்கு தந்திருக்கான்.

 உதாரணமாக, மனிதனின் உடலுக்குள்ளே நடப்பதை தெரிந்து கொள்கிற அறிவை அவனுக்கு தரவில்லை! நீயும் நானும் தட்டிலே இருக்கிற உணவை எடுத்து வாயிலே போட்டுக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.