(Reading time: 7 - 13 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

" மூணுபேருக்கும் ஒரு வாக்குறுதி தரேன், இனிமேல் நீங்க என்னை இந்த இடத்தைவிட்டு விரட்டுகிறவரையில், நான் போகமாட்டேன், இது சத்தியம்!"

மூவரும் சகாதேவனை கட்டியணைத்து முத்தமிட்டனர்!

மூவரின் கண்களுக்கு சகாதேவன், சர்வ வல்லமை பொருந்திய கடவுளாகவே தெரிந்தார்! மூவரின் மனதிலும் ஒரு புத்துணர்ச்சி, நம்பிக்கை, துணிவு, பிறந்தது!

" முதல்லே, இந்த நல்ல மாறுதலை நாம கொண்டாடி, நம்ம மனசிலே சந்தோஷத்தை கொண்டு வருவோம், சரியா?"

மூவரும் கைதூக்கி கைதட்டி தங்கள் பங்குக்கு ஆதரவு காட்டினர்.

" கடைக்குட்டி மாதவி! எங்கே நீ ஒரு பாட்டு பாடு! அதுக்கு காயத்ரி ஆடுவாள்! நானும் அம்மாவும் தலையாட்டி தாளம் போட்டு பாராட்டுவோம்! மாதவி! ஆரம்பி!"

" ஐயா! வேணாம், அவ பாடினா, நாம காதை மூடிக்கணும், பதிலா அவ நன்னா ஆடுவா, நான் பாடறேன்....."

மூவரும் வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தனர்!

'கேட்டவரெல்லாம் பாடலாம்,

என்பாட்டுக்குதாளம்போடலாம்

பாட்டினிலே பொருளிருக்கும்

பாவையரின்கதையிருக்கும்

மனமும் குளிரும் முகமும் மலரும்........."

பாட்டுக்கு தகுந்தாற்போல ஆடிய மாதவி, சகாதேவனையும் கண்ணகியும் எழுப்பி ஆட்டத்தில் சேரவைத்தாள்.

கவலையும், பயமும், திகிலும், சூழ்ந்திருந்த இடத்தில், எங்கிருந்தோ குதூகலம் குதித்து முழு இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டது!

பாட்டு முடிந்து, ஆட்டமும் நின்று, நால்வரும் கைதட்டி மகிழ்ந்தனர்.

" காயத்ரி! இப்ப தெரிஞ்சுதா? சந்தோஷமா இருப்பதும், பயத்திலே நடுங்குவதும், நம்ம மனசு செய்கிற விஷமத்தனம்!

முக்கியமா, பாட்டிலும் ஆட்டத்திலும் இல்லே, சந்தோஷம்! நம்மிடம்தான் இருக்கு, அதைத்தான் ஆடிப் பாடி தெரிவிக்கிறோம், சரியா?"

" நூற்றிலே ஒரு வார்த்தை, ஐயா!"

" நான் சொல்றதை கொஞ்சநேரம் கவனமா கேளுங்க!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.