(Reading time: 7 - 13 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

சற்று முன்பு, நான் கிளம்பினதும், உங்க மூணுபேர் மனசையும் கவ்வின பயம், நான் போகலைன்னு சொன்னதும், இருக்கிற இடம் தெரியாம ஓடிப்போயிடுச்சே, எப்படி?

உங்களை பயமுறுத்தின எதிரிகளை நான் கத்தியாலே வெட்டி சாய்த்துவிட்டேனா? இங்கேயே உங்கள் மத்தியில்தானே இருக்கிறேன், பின் எது அந்த எதிரிகளை விரட்டியது? சொல்லுங்கள்!"

மூவரும் பாதி புரிந்தும் மீதி புரியாமலும் விழித்தனர்!

" சொல்லட்டுமா? உங்களை பயமுறுத்தினது, எதிரிகளில்லே, உங்க மனசிலே இருக்கிற எதிரிகளைப்பற்றிய நினைவு! அந்த நினைவை எது விரட்டியது? நான் உங்களுடன் இங்கேயே வாழ்கிறேன் என்று சொன்ன ஒரு வாசகம்!

இப்ப புரியுதா? நாம வாழறது, நம்ம மனசுக்குள்ளேயே!

அந்த மனசு நினைச்சா நம்மை குஷிப்படுத்தும், இல்லேன்னா பயமுறுத்தும்.

அதனாலே, நம்ம மனசை நாம கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தே ஆகணும்!

சரி, 'நாம'ன்னு சொல்றேனே, யாரந்த 'நாம்'?

காயத்ரி! நீ சொல்லு!"

" என்னைப் பொறுத்த வரையிலும், 'நான்' என்பது காயத்ரி!"

" காயத்ரிங்கற பெயரிலே, நிறையபேர் இருக்காங்களே, எந்த காயத்ரி?"

"இதோ, உங்க முன்பு உட்கார்ந்திருக்கேனே, அந்த உடம்புதான் காயத்ரி!"

" அப்படியா? சரி, அந்த உடம்பு யாருடையது?"

" என் உடம்பு!"

" உன் அம்மா, உன் தங்கை, உன் வீடு, உன் உடை, என்பதுபோல, உன் உடம்பும் நீயில்லே, உன் உடமை! நீ வேறே, உன் உடம்பு வேறே! சரியா?"

" ஆமாம், ஐயா!"

" நான் உன்னை கேட்டது, யாரந்த நீ? உன் உடம்பு, உன் மனசு, உன் எண்ணம், உன் அறிவு, உன் மூச்சு எதுவுமே நீயில்லே, இவைகள் அத்தனைக்கும் அப்பாற்பட்டு இருப்பது நீ!

இந்த நேரத்திலே, நீ என்ன செய்கிறே?"

" ஐயா சொல்றதை கேட்டுக்கிட்டிருக்கேன்...."

" கேட்பது, உன் காது! பார்ப்பது உன் கண்கள், காது கேட்பதையும் கண்கள் பார்ப்பதையும் உன் அறிவுக்கு தெரிவிக்கிறதே, அந்த சக்திதான் 'நீ'!"

" ஐயா! மேலே நிறைய சொல்லுங்கய்யா! நாங்க கேட்டு, புத்தியை தெளிவா வச்சிக்கிறோம்!"

"நான் பதினெட்டு வருஷம் சிறையிலே அடைபட்டு கிடந்தேன், வெளிநடப்பு எதுவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.