(Reading time: 13 - 26 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 30 - சாகம்பரி குமார்

"ங்களுக்கு அந்த கவிதையை புரிகிறதா,?" என்று அதிதி கேட்டாள். அதற்கு வினய்,

" புரிகிறது…  இது கொஞ்சம் ஆழமான கவிதை. இதில் அபியுடைய உணர்வுகள் அழுத்தமாக பதியப்பட்டுள்ளன. உண்மையில் அவர்கள் உள்ளுக்குள் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். அறசீற்றம் என்று சொல்கிறீர்களே அந்த வார்த்தை சரியானது தான். அந்த கோபத்தை அழிவுக்கு பயன்படுத்தாமல் ஆக்கத்துக்கு கொண்டு போக முடியுமா என்று முயற்சிக்கிறார். " தொடர்நது

"அணு உலையிலும் அணுகுண்டிலும் ஒரே விஞ்ஞானம்தான். என்ன ஒன்று... அணுஉலையில் அதீத வேகமடையும் துகள் கட்டுபடுத்தப்படுகிறது. அணுகுண்டில் கட்டுபாடில்லாமல் மோதல் அதிகரித்து வெடிக்கிறது. அதேபோல தன்னுடைய  கோபத்தை கட்டுப் படுத்துவதற்கு நிறைய அன்பு தேவைப்படுகிறது. அதுவும் அன்னையின் அன்பு…  நான் நினைக்கிறேன் அது உங்களிடம் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்எப்படி  அபியின் அரவணைப்பு உங்களுடைய அன்னையை உங்களுக்கு நினைவுபடுத்தியதோ…  அது போல உங்களுடைய அருகாமை அவருக்கு அன்னையை நினைவுபடுத்தி இருக்கும் என்று தோன்றுகிறது. அவருடைய வாழ்க்கையில் நீங்கள் அவருடன் இருக்க வேண்டும்…  என்று நினைக்கிறார் என்றும் தோன்றுகிறது" என்றான்.

"கண்டிப்பாக நான் என் சகோதரியுடன்தான் இருப்பேன். இதுவரை அவள் மிகவும் துன்பத்துடன்  வாழ்ந்து வந்திருக்கிறாள். வேதனையும் வலியும் நிறைய தாங்கி இருக்கிறாள். அவளுக்கு நான் ஆறுதலாக இருப்பேன் என்றால் கண்டிப்பாக நான் அவளுடன் இருப்பேன். அளை அந்த துன்பத்திலிருந்து வெளிக்கொணர்வது என்னுடைய பொறுப்பு" என்றாள்.

"அதுதான் சரி" என்று சொல்லிவிட்டு,

" உங்களுக்கு பாஸ் எதுவும் போன் செய்தாரா?. ஏதாவது விவரம் சொன்னாரா?" என்று கேட்டான்.

" இல்லை உங்களிடம் எதுவும் சொல்லி இருப்பார் என்று நினைத்தேன்"

" என்னிடம் அபியுடைய மருத்துவ சிகிச்சைக்கான நடவடிக்கைகளை... அவர் திட்டம் இட்டு  கொண்டிருக்கும் நடவடிக்கைகளை மட்டுமே பேசினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.