அபியை வைத்தியர் தாத்தா சமாதானம் செய்து மூலிகை குளியலுக்கு தயார் செய்தார்.
"அம்மா… அதிதி இது கடுமையான முறை. அதிரகசியமானது. நான் இதுவரை இதை முயற்சித்தது இல்லை.அபிக்கு தேவையான மருத்துவமாக இருக்கும் என்று நம்புகிறேன். அணுவிற்குள் அணுவான பரம அணுவில் மாற்றம் செய்யும் மூலிகைகளை பயன்படுத்தி இருக்கிறோம். ஒரு வாரம் அவர் இதில் மூழ்கி இருக்க வேண்டும். பிராணவாயு மட்டுமே உணவாகும். இடையில் எழக் கூடாது."
"நான் அக்காவுஞன் இருந்து பார்த்து கொள்கிறேன் ஐயா. இப்போது ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?"
"இந்த மூலிகை தயாராக இருபத்திநான்கு மணி நேரம் ஆகும். இந்த சாற்றை கிளறிக் கொண்டு இருக்க வேண்டும்."
அதிதி அந்த வேலையை பார்க்க ஆரம்பித்தாள். அபிக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் ஒருமுறை அதிரதனும் வினயும் செய்தனர். இரத்த அழுத்தம்… நாடித்துடிப்பு… உஞல் வெப்பம் ஆகியவற்றை தொடர்ந்து மானிட்டர் செய்ய வேண்டும்.
அதற்கான கருவிகளை இணைக்கும் பொறுப்பை வினயிடம் தந்தான்.
"வினய்.. நான் அப்பாவிடம் பேசிவிட்டு வருகிறேன். நீ இவற்றை இணைத்து சரியாக நதிவு செய்கின்றனவா என்று டெஸ்ட் செய்து விடு"
"ஓகே பாஸ். எதற்கும் ஸ்டண்பை வைத்துக் கொள்ளலாம் பாஸ். இடையில் இவை மக்கர் செய்தால் மாற்று கருவி வேண்டும்."
"அதைத்தான் அப்பாவை கொண்டு வய சொல்கிறேன். நான் போய்ட்டு வந்திடறேன்"
"ஓகே" என்றவன் அபியை மூழ்க வைக்கும் பாத் டப்பை சுற்றி கருவிகளை அமைக்க ஆரம்பித்தான். அதிலிருக்கும் டேட்டா கேபிள்கள் நீருக்குள் சரியாக செயல்படுகின்றனவா என்று பரிசோதிக்க வேண்டும். அதற்கு… அபி இங்கு வர வேண்டும்...!
அங்கு அபியை குணப்படுத்தும் வேலைகள் மும்முரமாக ஆரம்பிக்க…
மும்பையில்… ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு மீட்டிங் நடந்து கொண்டு