(Reading time: 13 - 26 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

மற்றபடி நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா...  நேரத்திற்கு சாப்பிடுகிறீர்களா?... தூங்குகிறீர்களா..?" என்று  அதிதி கேட்கவும் அவனுக்கு சிரிப்பு வந்தது போல இருந்ததுமெல்லிய சிரிப்பு குரலில் கூறினான்.

" நான் இங்கே ஓய்வெடுக்க வந்திருக்கிறேனா?. இதை எல்லாம் சரியாக செய்ய வேண்டும் என்ற கவலை எனக்கிருக்கிறது"

"நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க தயக்கமாக இருந்தது... அதுதான்"

"நான் இங்கு ஒரு முக்கியமான விஷயமாக வந்திருக்கிறேன். அந்த விஷயத்தில் முழு கவனமும் செலுத்தி கொண்டிருக்கிறேன். இதுதான் ஒரு ஆராய்ச்சியாளனின் பலமும் பலவீனமும்... ஒரு விஷயத்தை எடுத்து விட்டால் அதிலேயே மூழ்கி விடுவார்கள்."

"ஆங்.. நான் அப்படி இல்லையே…  உங்களை நினைத்து கொண்டு இருக்கிறேன்"

"ஐம் குட்சரி, உன்னை நான் கேட்கவேயில்லையே…   நான் எவ்வளவு பெரிய தவறு செய்து கொண்டிருக்கிறேன். நான்கு நாட்கள் ஆயிற்று. உன்னுடன் தொலைபேசியில் பேச கூட எனக்குத் தோன்றவில்லை பார். நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் எப்படி இருக்கிறாய் என்று எனக்கு யோசிக்க கூட நேரமில்லை.என்னை மன்னித்து விடு"

அதைக் கேட்கவும் அவளுக்கு மிகவும் வருத்தமாக விட்டது. ' அடடா தன்னுடைய வேலையில் முழு கவனமாக இருப்பவனை தேவையில்லாமல் தொந்தரவு செய்து விட்டாளோ! அவளும் உடனே அவனிடம் மன்னிப்புக் கோரினாள்.

 " எனக்கு உங்களைப் பற்றி கவலையாக இருந்தது. நீங்கள் சரியாக உங்களை கவனித்துக் கொள்ள மாட்டீர்களோ என்று தோன்றியது. அதனால்தான் நான் பேசினேன். மற்றபடி உங்களை தொந்தரவு செய்திருந்தாலோ.. . உங்களுடைய கவனத்தை கலைத்து இருந்தாலும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்ஶ்ரீ சீக்கிரமாக வந்து விடுங்கள்என்று சொன்னாள்.

' கண்டிப்பாக என்னுடைய வேலைகள் அல்மோஸ்ட் முடிந்து விட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.