(Reading time: 13 - 26 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இன்னும் ஒரே ஒரு மூலிகை மட்டுமே மீதம் உள்ளது அதை இன்று தேடி எடுத்து விடுவோம். நானும் ஜெனிட்டாவின் தாத்தாவும் அங்கு வருகிறோம். அபியுடைய சிகிச்சைக்கான முதல்கட்ட மருந்துகளை தயார் செய்து விடுவோம். நீ வினயிடம் சொல்லி ஒரே ஒரு 'பாத் டப்' மட்டும் தயார் செய்து வைக்கச் சொல் "

" சரி அது எதற்கு?"

 "அது அவனுக்குப் புரியும். நீ நாங்கள் செய்யும் பொழுது பார்த்துக்கொள்

" சரி நான் அப்படியே செய்து விடுகிறேன் உடம்பை பார்த்து கொள்ளுங்கள்"

"ம்.. அதிதிஎனக்கு கால் செய்து விசாரித்ததற்கு நன்றி. டேக் கேர்" அழைப்பைத் துண்டித்து விட்டான்.

சற்று நேரம் அலைப்பேசியை பார்த்து கொண்டு இருந்தாள். அவனுக்கு போன் செய்ய வேண்டும் என்று ஏன் அவளுக்கு தோன்றவில்லைஅவன் எதிர்பார்த்து இருப்பான் போலயேஎன்று வருத்தப்பட்டாள்.

 பிறகு வினயை தேடினாள். வினய் அவருடைய அறையில் இருந்தான். அவளை பார்க்கவும்

"பாஸிடம் பேசி விட்டீர்களா?"

"நான் அவரிடம் பேசி விட்டேன். அவர் சென்ற வேலை முடிந்து திரும்ப போகிறாராம். நாளை கிளம்பி வந்து விடுவார் என்று சொன்னார். உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல சொன்னார் ஒரு 'பாத் டப்' தயார் செய்து வைக்கும்படி சொன்னார்" என்று சொன்னாள்.

"சரி நான் செய்து விடுகிறேன்" என்று வினய் சொல்லவும்,

" அது எதற்கு தேவைப்படுகிறது" என்று கேட்டாள்.

" நான் நினைக்கிறேன் மூலிகை குளியல் எடுப்பதற்காக தேவைப்படும். அந்த பாத் டப்பில் மூலிகை நீரை  தயாரித்து நிரப்பி அதில் அபியை படுக்க வைப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அபியுடைய எலும்பு பிரச்சினையை இந்த முறை தீர்க்கும் என்று நினைக்கிறார் போலும்அந்த மூலிகை தைலம் நிறமிகளை உருவாக்கி  தோலின் நிறத்தை மாற்ற செய்யலாம் அல்லது அபியுடைய கால் எலும்பை பலப்படுத்தலாம்எனக்கு சரியாக விவரம் தெரியவில்லை. பாஸ் வரவும் கேட்டு சொல்கிறேன்" மேலும் தொடர்ந்து

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.