(Reading time: 7 - 13 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

தெரிஞ்சிக்கிற வாய்ப்பே இல்லே! நீங்க இப்ப எனக்கு நாட்டுநடப்பை சொல்லுங்க!"

"ஐயா! எங்கம்மா ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். எம்.ஏ. படிச்சிருக்காங்க! அவங்க நல்லா பேசுவாங்க, டீச்சராச்சே!"

" அப்படியா! நல்லதாப் போச்சு! சொல்லும்மா, நாங்க மூணுபேரும் மாணவர்களைப் போல, கைகட்டி வாய்பொத்தி, கேட்டுக்கிறோம்......." என்று கூறிவிட்டு, சொன்னபடி, கைகட்டி வாய் பொத்தினார்!

மூவரும் 'கலகல'ன்னு சிரித்தார்கள்.

" ஐயா! இந்த நிமிஷத்திலே உலகத்தையே குலை நடுங்கவைத்திருக்கிற கொரோனாவைப் பற்றி, முதல்லே, சொல்றேன்!"

" , அதுதானா? சிறையிலே இருக்கிற கைதிகளிலே பலபேரை திடீர்னு வெளியிலே விரட்டிட்டாங்க!......"

" ஆமாம் ஐயா! இப்ப நாட்டிலே ஊரடங்கு சட்டம் அமுலாகி, எல்லாரையும் வீட்டுக்குள்ளே முடக்கிப் போட்டிருக்காங்க!

இந்த பயங்கரமான தொற்றுநோய், காற்றிலே பரவாதாம், ஆனால், நாம தும்முகிறபோது, பக்கத்திலே உள்ளவங்களை தொற்றிக்குமாம்! கதவுகளிலே, கைப்பிடியிலே, ஒட்டிக்குமாம்! காய்ச்சல், இருமல், ஜலதோஷம் அறிகுறிகளாம்!

பாதிக்கப்பட்டவங்களை தனியா ஒதுக்கி சிகிச்சை தராங்க! வெளிநாட்டிலிருந்து வரவங்களை, அவங்களுக்கு இந்த நோய் இருக்கலாம் என்கிற சந்தேகத்திலே முதல் ரெண்டு மூணு வாரம் தனிமைப்படுத்தி சோதனை செய்கிறாங்க!

இந்த வியாதி முதல்லே துவங்கியது, சீனாவிலே, வுஹான் என்கிற இடத்திலே! சீனாவிலே ஆயிரக்கணக்கிலே இறந்துவிட்டார்கள், அதைவிட இதாலியிலே அதிகம் பேர் இறந்ததுக்கு காரணம், சிகிச்சைக்கான மருத்துவ வசதி இல்லையாம்.

இப்ப, ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டு, வேகமா பரவுகிறது, அமெரிக்காவிலே! ........."

"சரிம்மா! கேட்கவே அருவருப்பாயிருக்கு, இது வருவதற்கு என்ன காரணம்னு நீங்க நினைக்கிறீங்க?"

"கலி முற்றிப்போச்சுன்னு மதவாதிகள் சொல்றாங்க!"

" அப்படின்னா?"

" தர்மமும் நீதியும் முடங்கி, அதர்மமும் அநீதியும் தலைதூக்குகிறபோது, இறைவன் உலகத்தை திருத்துவதற்காக, அனுப்பியிருக்கிற விஷவாயு!"

" அதையே வேற விதமா, நான் சொல்லட்டுமா?"

மூவரும் சகாதேவன் கூறப்போவதைக் கேட்க காதை தீட்டிக்கொண்டனர்!

தொடரும்...

Go to Vazhve Maayam story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.