(Reading time: 6 - 12 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

தொடர்கதை - வாழ்வே மாயம்! - 05 - ரவை

கொரோனா, உலகை வேதனைக்குள்ளாக்க வந்துள்ளதின் காரணத்தை, தனக்கு தோன்றியதை, கண்ணகி சொல்லி முடித்ததும், சகாதேவனின் விளக்கத்தை கேட்க, கண்ணகி, காயத்ரி, மாதவி மூவரும் காதை தீட்டிக்கொண்டு காத்திருந்தனர்.

சகாதேவன் நெடுநேரம் யோசித்தபின் பேசினார்!

"ஆதி நாளிலிருந்து, உலகம் தோன்றி, உயிரினங்கள் மலர்ந்து, படிப்படியாக, சிறியதிலிருந்து பெரிதுக்கு வளர்ந்து மனிதனாக உருவெடுத்த நேர்த்தியை கவனித்துப் பார்த்தால், அதில் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு இருப்பதை காணமுடியும்.

உலகுக்கும், உயிரினங்களுக்கும்,எப்போதுஎது தேவையோ, அதை அப்போது அளித்துவந்த மகாசக்தியின் சீரான படைப்புக்கு எதிர்மறையாக, மனிதன் தன் சிற்றறிவினால், அழிவுச் சக்திகளை உருவாக்கினான். அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு வீசி இயற்கையையும் மனித இனத்தையும் அழித்தான்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உபயோகித்து, மக்களை கொன்றான்.

பூமிக்கு வெளியே சந்திர மண்டலம், செவ்வாய் கிரகங்களுக்கு ராக்கெட்களை அனுப்பினான்.

சுற்றுச்சூழ்நிலைகளை மாசுபடுத்தும் எல்லா காரியங்களையும் செய்தான். அத்தகைய அழிவுச் செயலுக்கான, முக்கியமான

அடிப்படைக் காரணத்தை, மகாசக்தி ஆராய்ந்திருக்கவேண்டும், அப்போது அந்தக் காரணம், மனிதனின் ஈகோ, தான் எனும் அகம்பாவம், செறுக்கு, தன்னால் எதையும் சாதிக்கமுடியும் என்ற தன்முனைப்பு என்பதை கண்டறிந்து, அதற்கொரு சவாலாகத்தான், கோவிட் - 19 என்கிற கண்ணுக்குத் தெரியாத அழிவுச் சக்தியின் மூலம், ஒட்டுமொத்த உலகையே ஒரே நேரத்தில் சவாலுக்கு அழைக்கிறது, மகாசக்தி!

இது ஒரு வெறும் அச்சுறுத்தல்தான்! உலகிலுள்ள அத்தனை வல்லரசுகளுக்கும் விடப்பட்டுள்ள சவால்!

'முதலில் இது என்ன என்று கண்டுபிடியுங்கள், பிறகு அதற்கு ஒரு மருந்து தயார் செய்யுங்கள், அதை பரிசோதியுங்கள், பிறகு உபயோகியுங்கள், மக்களை குணப்படுத்துங்கள்,

இந்த இடைக்காலத்தில், உங்கள் ஈகோ இருக்குமிடம் தெரியாமல் ஒழிந்து போகட்டும்!' என்கிறது, மகாசக்தி!

தன்னம்பிக்கையும், முயற்சியும், சாதிக்கவேண்டும் என்ற துடிப்பும் இருக்கட்டும், ஆனால் பிறரை அழித்து தன்னை மேம்படுத்திக் கொள்ளும் ஈகோ ஒழியட்டும் என்று மறைமுகமாக மானிட சமுதாயத்தை எச்சரிக்கவே, கொரோனாவை அனுப்பியிருக்கிறது, மகாசக்தி!

அதனால்தான் சின்னஞ் சிறிய தீவிலிருந்து மிகப் பெரிய கண்டம் வரை, எளிய மக்களிலிருந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.