(Reading time: 6 - 12 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

கொரோனா நமக்கு கற்றுத் தருகிற பாடம், இதுதான்!"

சகாதேவன் விளக்கத்தை முடித்ததும், மூவரும் அவர் காலடியில் பணிந்து, " ஐயா! நீங்க சொல்வதைக் கேட்டு எங்களுக்கு புதுதெம்பு பிறந்திருக்கிறது, இனி யாருக்கும், எதற்கும் அஞ்சி நடுங்கமாட்டோம்.

தொடர்ந்து நாங்கள் அப்படியிருக்க, ஐயா! நீங்கள் எங்களுடன் தொடர்ந்து வாழவேண்டும்!"

சகாதேவன் வாய்விட்டு சிரித்தார்.

மூவரும் திகைத்தனர்.

" எழுந்திருங்க! விடிய விடிய, கதை கேட்டு, 'சீதைக்கு ராமன் சித்தப்பா'ங்கிறமாதிரி, பேசறீங்களே!

முதலாவது, எனக்குள்ளே உள்ள சக்தி, உங்க ஒவ்வொருத்தர் உள்ளேயும் இருக்குன்னு சொல்லி முடித்தவுடனேயே, நீங்கள் தொடர்ந்து தைரியமா வாழ, என் துணையை ஏன் அவசியம் னு நினைக்கிறீங்க?

இரண்டாவது, நீங்க எதற்காக, யாருக்காக, பயப்படணும்? சொல்லுங்க! உங்க பணத்தை யாராவது திருடிடுவான்னா, மானத்தை எவனாவது கெடுத்துடுவான்னா, உயிரை கொன்னுடுவான்னா, எதுக்கு பயப்படறீங்க? இதிலே எதுவுமே நீங்க இல்லே! இவைகளுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒண்ணு!

அது எதுன்னு சொன்னா, அப்படி சொல்லப்படுவது அது அல்ல; உங்களுக்குள்ளே இருந்து அதை சொல்கிறதே, அதுதான் அது!

அதை விளக்கமுடியாது, உணரணும்!

நம்பிக்கை அதற்கு வேணும்!

என்னை எடுத்துக்குங்க!

சிறைக்குள்ளே தள்ளப்பட்டபோது, நான் பலாத்காரத்தில் நம்பிக்கை வைத்திருந்த, வெறிபிடித்த, முரடன், மூடன்!

சிறைக்குள், பதினெட்டு ஆண்டுகள் கொலைகாரன்களுடன், திருடன்களுடன், ரௌடிகளுடன், காமுகர்களுடன்தான் இருந்தேன்.

ஆனால், அந்த மகாசக்தி என்னை ஆட்கொண்டு, என் ஈகோவை நசுக்கி அழித்துவிட்டு, என்னை சிந்திக்க வைத்தது!

என்னை தலைகீழாக மாற்றியது!

இப்போது நான் உணர்ந்துவிட்டேன், நாம் அனைவரும் ஒரு பெருங்கடலின் சிறுதுளிகள்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.