(Reading time: 6 - 12 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

இளவரசர் ஈறாக, எல்லா நிலைகளிலும் பாதிப்பு உள்ளது.

லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டாலும், மாண்டவர் எண்ணிக்கை ஆயிரங்களுக்குள் இருப்பதிலிருந்து, இது ஒரு எச்சரிக்கைதான், இதையும் மீறி மனிதனின் ஈகோ தலை தூக்குமானால், என்ன நடக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

காயத்ரி! இது உலகத்துக்கு மட்டுமல்ல, தனி மனிதனுக்கும் விடப்பட்டுள்ள சவால்!

பதவிகளில் உள்ளவர்கள், பணக்காரன்கள், ரௌடிகள், மதவாதிகள், பாலியல் வெறிபிடித்தவர்கள், எல்லோருக்கும் சேர்த்துத்தான் இந்த சவால்!

நமக்கு உடனடியாக தேவைப்படுவது, மனிதன் உள்நோக்கி கவனிப்பது!

ஒவ்வொருவனும் தன் மனதின் ஆளுமைக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கிறான். மனதே, ஈகோவின் தூண்டுகோல்!

மனது ஒரு நேரத்தில் மகிழ்ச்சியையும் மறுநிமிடமே துயரத்தையும் தந்து ஆட்டுவிக்கிறது, அறிவை செயல்பட விடாமல் முடக்குகிறது!

கடந்த காலத்தைப்பற்றிய நினைவுகளிலும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளிலும் நம்மை அலைக்கழித்து, நிகழ்காலத்தில் வாழ்ந்து கண்ணெதிரே தெரியும் சத்தியத்தை காணமுடியாமல் செய்கிறது.

நம் நால்வரையுமே, நிகழ்காலத்தில் வாழவிடாமல் தடுப்பது, ஈகோதான்!

உண்மை என்ன தெரியுமோ?

நம்மை சுற்றியுள்ள வெட்டவெளியில் உள்ள காற்று அல்லது வெறுமைதான், இதோ இந்த மண்பானைக்குள்ளும் உள்ளது, மண்பானைக்குள் இருக்கும்போது இது பானைவெறுமை! பானை உடைந்து அதே பானைவெறுமை, வெளியே உள்ள வெறுமையுடன் கலக்கும்போது, அது வெட்டவெளி! இரண்டும் ஒன்றுதானே!

அதே போலத்தான், வெளியே உள்ள மகாசக்திதான், சிறிய வடிவில் தனிமனிதனின் உள்ளேயும் இருக்கிறது.

அந்த உள்ளிருக்கும் மகாசக்தியை அடக்கிவைக்கும், அழிக்க நினைக்கும், விஷமிதான், மனம் அல்லது ஈகோ!

அதனால், என்ன ஆகுமோ ஏதாகுமோ என்றெல்லாம் எதற்கும் பயந்து நடுங்காமல், நாம் அழிவே இல்லாத அந்த மகாசக்தியின் ஒரு பகுதிதான் என முதலில் உறுதியாக நம்பவேண்டும்!

தலைநிமிர்ந்து ஆனால் கர்வமின்றி அடக்கமாக தன்னம்பிக்கையுடன் எப்போதும் பயமின்றி மகிழ்வுடன் வாழவேண்டும்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.