"ஹேய் சிவா, இன்னிக்கி என்ன பண்ணலாம்னு இருக்கடா? அடுத்த கட்ட நடவடிக்கைதான் என்ன? ஏன் இப்படி அமைதியா இருக்கற?"
"இன்னிக்கி எங்கேயும் போகலடா. வேற வேலை இருக்கு."
"என்ன மச்சி உன் ஆளு வராங்களா? என்ன விஷயம்?"
"ஆமா. இன்னிக்கி இங்க வரா. அவங்க வீட்ல அவளுக்கு தெரியாம திருமண ஏற்பாடு நடக்குதாம். அதை எப்படி தடுத்து நிறுத்தலாம்னு தெரியாம அழுதுட்டே இருக்கா."
"சரி மச்சி இப்போ என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? நம்ம இப்போ இருக்கற நிலைமையில கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த எல்லாம் முடியுமா?"
"எனக்கும் தெரியும் கதிர் இது எதுவும் முடியாதுன்னு. வரட்டும் பேசிக்கலாம்."
சிவா, மதுரை செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பவன். என்னதான் பட்ட படிப்பு படித்திருந்தாலும் விவசாயம் செய்
...
This story is now available on Chillzee KiMo.
...