(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 11 - ஆர்த்தி N

maraveno ninnai

வர்களது ஷாப்பிங்க் முடிய தானதமானதால் சூர்யா அவனே ஷைலுவை கொண்டுவந்து அவள் வீட்டில் விடுவது என தீர்மானமானது. ஷைலுவிற்கு அவர்களை அழைக்கழிப்பதில் துளியும் விருப்பமில்லாததால் தனது வண்டியில் போய் கொள்வதாக கூறினாலும், அதற்கும் சூர்யவிடம் ஒரு தீர்வு இருந்தது. அவளது வண்டியை ஆள் வைத்து பிறகு அனுப்பி வைப்பதாக அவளுக்கு வாக்களித்து அப்பேச்சிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தான்.

அம்மா அப்பா வந்து இருப்பாங்கல ஷைலு.. நாங்களும் அவங்கள பார்த்திட்டு கிளம்பற மாதிரி இருக்கும்.. ஓவராப் பண்ணாதஎன தமக்கையும் அடக்க.. வேறு வழியில்லாமல்சரி.. ஓசி ரைட் ல ஏசி ஓட வர கசக்குதா என்ன எனக்கு.. உங்களுக்கு பாவம் பார்த்தேன் பாருங்க..” என விளையாட்டக தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

அரை மணி நேரம் பயணத்தில் திருவான்மியூரில் இருந்த ஷைலுவின் இல்லத்திற்கு முன் சூர்யாவின் கார் நின்றது. கேட் திறக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த சரவணன் தன்  வீட்டின் மாப்பிள்ளையை அணைத்து உள்ளே அழைத்து செல்ல.. சூர்யாவும் மாமானாரின் கைகளில் அடங்கி அவரின் நலம் விசாரித்துக் கொண்டே உடன் நடந்தான்..

அப்பா உங்க பொண்ணும் வந்திருக்கேன்.. என்னையும் கொஞ்சம் கண்டுக்கலாம்..” என ரிந்து தன் கணவருக்கும் தந்தைக்கும் நடுவில் புகுந்துக்கொண்டு தந்தையின் கைப் பிடித்து இழுக்க..

அப்போ நானு..” என ஷைலு சரவணனின் பின்பக்கம் வந்து தாவ..

அடியே விஜிஜிஜி.. என்ன நீ பெத்த ரெண்டு வானரம் கிட்ட இருந்துக் காப்பாத்து..” என சரவணன் அலற..

சமையலறையில் இருந்து வெளி வந்த விஜயலக்ஷ்மி.. சூர்யாவிடம் மரியாதையாக.. “வாங்க மாப்பிள்ளை.. உட்காருங்க..” உபசரித்தவர்.. கணவனின் புறம் திரும்பி.. “அதுங்க தான் சின்ன பிள்ளைங்க விளையாடறாங்கனா.. நீங்க இப்படியா கத்துவீங்க.. என்னமோ ஏதோனு பயந்துப் போய் வரேன்..” என கடிக்க..

ஏண்டி பேசமாட்ட.. என் பிள்ளைங்க எங்கிட்ட இப்படி ஒட்டிக்கிறதுல உனக்கு பொறாமை..” என தன் மனைவியை சீண்ட..

எங்கு தங்கள் தாய் கோபித்துக் கொள்வாளோ என இருவரும் விஜிப் புறம் செல்ல கால் எடுத்து வைத்தப் பொழுது.. “நீங்களே உங்க பொண்ணுங்களை கொஞ்சுங்க.. தொல்ல விட்டுச்சுனு நான் நிம்மதியா இருந்துக்கறேன்..” என சிரித்துக் கொண்டே மூவரையும் சீண்ட..

அம்மாஆஆஆ.. நாங்க உங்களுக்கு தொல்லையா.. இந்தாங்க இந்த பேக் எல்லாம் போய் உள்ளே வைங்கஎன இருவரும் இப்பொழுது விஜியின் இருப்பக்க கண்ணத்தையும் பிடித்து இழுத்தப் படியே அவர்களுக்காக வாங்கிட்டு வந்தவற்றை அணைத்தையும் விஜியின்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.