(Reading time: 8 - 15 minutes)

என எல்லோருக்கும் தந்தார்.. அதைப் பருகியப் பின்னரே இருவரையும் அனுப்பிவைத்தார் விஜி.

சந்தோஷும் கிளம்ப.. “டேய் சந்தோஷ் அப்பா ஏதோ பேசனும்னு சொன்னாரு.. நாளைக்கு அவரோட ஆஃபிஸ்க்கு சாயங்காலமா வரேன்னு சொல்லிரு.. நான் கூப்பிட்டுக்கறேன்.. இருந்தாலும் நீ ஒரு வார்த்தை சொல்லிரு..” என சரவணன் கூற..

சரி மாமா.. சொல்லிடறேன்.. பை அத்தை.. பை ஷைலுக் குட்டி..” என அவனும் கிளம்பினான்..

ஷைலு மணிப் பத்தாச்சு.. நாளைக்கு ஸ்கூலுக்கு கிளம்பனும் இல்லை.. போய் படுப் போ..” என விஜி அவளை விரட்ட..

சரி ம்மா.. ரெண்டு பேருக்கும் குட்நைட் .. நீங்களும் சீக்கிரம் போய் படுங்க..” என அவள் தனதறைக்கு செல்ல மாடி ஏறினாள். அவள் அறையில் வந்து படுக்கையில் விழுந்தவள் இன்றயை பொழுதை ஒரு தரம் மனதில் ஓட்டிப் பார்த்து ஓர் இனிமையான மனநிலையுடன் உறங்க ஆரம்பித்தாள் அங்கு இவளால் ஒருத்தன் உறக்கத்தை தொலைத்தது அறியாமல்.

அம்ம்மா.. கூல்.. இப்போ எதுக்கு இவ்வளோ டென்ஷன்.. என்னால கண்டிப்பா எல்லா வாரமும் கோயம்புத்தூர் வர முடியாது.. நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. மாசத்துல ஒன்ஸ் வரேன்ல அப்புறம் என்ன.. குட்டா வேற இந்த வாரம் இங்க அவனோட பொடிக் ஆரம்பிக்க சைட் பார்க்க வரான்.. பேசாம அவனோட கிளம்பி நீங்களும் இங்க வாங்க.. கொஞ்ச நாள் இங்க இருங்க..” என தன் அன்னை ஊருக்கு வர சொல்லி நச்சரிப்பதிற்கு ரிஷி ஒரு தற்காலிக தீர்ப்பு சொன்னான்..

அவன் மாதம் ஒரு முறை எவ்வளவு வேலைப் பளு இருந்தாலும் தன் அன்னைக்காக கோயம்புத்தூர் சென்று விடுவான். அங்கு உள்ள அவர்களது மில்லை மாமா பார்த்துக் கொண்டாலும் கணக்கு வழக்குகளை அந்த நட்களில் இவனும் ஒரு தரம் சரிப் பார்ப்பான். இந்தியாவில் மட்டுமே 4 இடங்களில் இவனது ஐடி நிறுவனம் கிளையை இந்த 6 ஆண்டுகளில் தொடங்கியிருந்தான். அதுப் போக இப்பொழுது தான் ஒரு அயல் நாட்டு சாஃப்ட்வேர் நிறுவனத்தை அக்வையர்(acquire) செய்திருந்தனர். ஆதாலால் அவனுக்கும் பணி நெட்டி முறிந்தது.

சாரதாவும் அவன் சொன்னதை அரை மனதுடன் ஏற்று க்ருஷுடன் வருவதாக ஒப்புக் கொண்டார்.

சிறிது நேரம் அவனது லேப்பில் சில அலுவல் வேலைகலைப் பார்த்து முடித்து, உறக்கம் வராதப் பொருட்டு வீட்டின் முன் இருந்த தோட்டத்தில் நடைப் பயில தொடங்கினான். வேலை சம்மந்தப்பட்ட விஷயங்கள் பின்பு அவன் அன்னையுடன் பேசியது என ஒவ்வொன்றாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.