(Reading time: 11 - 21 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தொடர்கதை - பிரியமானவளே - 01 - அமுதினி

னக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

அது மிக பெரும் பணக்காரர்கள் வசிக்கும் சென்னையின் ஒரு பகுதி. அந்த தெருவே அழகழகான குல்மோஹர் மலர்கள் நிரம்பிய மரங்களால் செழிப்பாக இருந்தது. அதனாலேயே அந்த காலனிக்கு குல்முகர் காலனி என்று பெயர் வந்திருக்குமாயிருக்கும். இருபுறமும் வரிசையாக நின்றிருந்த மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்களால் அந்த சாலையே ரம்மியமாக காட்சி அளித்தது.

அந்த சாலையின் ஒரு ஓரத்தில் ஒரு கைப்பையுடன் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள் தமிழ்செல்வி. 

மரத்தில் இருந்த மலர்களெல்லாம் கீழே குனிந்து அவளை நோக்க ஆசைப்பட்டது இப்படி ஒரு அழகியை பார்த்ததில்லையே என. அவளின் பாதம் பட்ட மலர்கள் எல்லாம் பேரானந்தம் கொண்டது இப்படி ஒரு அழகியின் பாதம் பட்டதே என. ஆனால் அதை குறித்து எல்லாம் அவள் கவனித்ததாக தெரியவில்லை. யோசனையுடன் நடந்து கொண்டிருந்தாள். அடுத்து என்ன? எங்கே செல்வது? இதுவே அவள் மனதில் ஓடி கொண்டிருந்தது.

யோசனையுடன் நடந்தவள் முன்னே சென்று கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணி நிலை தடுமாறி கீழே சாய்வதை கண்டவள் அவரிடம் ஓடினாள்.

"அய்யயோ கீழ விழுந்துட்டாங்களே" என பதறியவள் அவரை தன்னுடைய மடியில் படுக்க வைத்து தன்னுடைய கைப்பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறிது தண்ணீரால் அவரது முகத்தை கழுவி விட்டாள்.

"பாட்டி பாட்டி " மெல்ல அவரது கன்னத்தை தட்டினாள். அவர் சற்று சிரமத்துக்கு இடையே மெல்ல கண்ணிமைகளை பிரித்தார். அவரது வாயில் சிறிது தண்ணீரை புகட்டவும் மெல்ல அவள் கைபிடித்து எழுந்து அமர்ந்தார்.

அவரை பார்த்தாலே அவர் பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிந்தது. இந்த பகுதியில் இருக்கிறார் என்றாலே நிச்சயம் பணக்காரக்குடும்பமாக தான் இருக்கமுடியும் என்று எண்ணியவள் "என்ன ஆச்சு பாட்டி? " என்றாள் தன்மையாக.

"மதியம் பிபி டேப்லெட் போட மறந்துட்டேன் அதான் பிபி அதிகமாயிடுச்சு போல" என்றார் நட்பான புன்னகையுடன்.

"ஒ...இப்போ எப்படி இருக்கு? ஏன் தனியா வந்திங்க? கூட யாரையாச்சும் கூட்டிட்டு வந்துருக்கலாமே பாட்டி" அவர் எழுந்து நிற்க உதவியவள் கேட்கவும் "பிபி மாத்திரை போடல. அதான் மத்தபடி நான் இன்னும் சின்ன பொண்ணு தான்" அவர் சொன்ன பாவத்தில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.