(Reading time: 11 - 21 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தமிழ்செல்வியின் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.

"கண்ணு முழிச்சு பார்த்தப்போ ஏதோ வானத்துல போற தேவதை தான் இறங்கி வந்து என்னை மடியில படுக்க வெச்சுருக்கோனு நெனைச்சேன்" முதலில் அவர் சொன்னது புரியாமல் விழித்தவள் இப்போது வாய்விட்டு சிரித்தாள்.

"என் பேரு  விசாலம். உன் பேர் என்ன?" அவளின் சிரிப்பை ரசித்தவாறே கேட்டார் பாட்டி.

"என் பேரு தமிழ்செல்வி பாட்டி" தமிழ்செல்வி சொல்ல, "என்னது தமிழ்செல்வி பாட்டியா? பாட்டினு எல்லாமா பேரு வெப்பாங்க?" பாட்டி முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு சந்தேகம் கேட்க, "ஐயோ பாட்டி" என அடக்கமுடியாமல் சிரித்தாள் தமிழ்செல்வி.

"ரொம்ப அழகான தமிழ் பெயர். உன்னை போலவே...எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு தமிழ்செல்வி. உன்னை நான் இதுக்கு முன்ன இந்த பக்கம் பார்த்ததே இல்லையே...எங்க உன் வீடு?" தமிழ்செல்வியின் கையை பிடித்து வீட்டை நோக்கி நடந்தவர் கேட்டார் விசாலம்.

"என் வீடு இந்திரா நகர்ல இருக்கு பாட்டி. இங்க நான் வேலை செய்துட்டு இருந்தேன்" தமிழ்செல்வி சொல்லவும் "செய்துட்டு இருந்தேன் அப்படினா இப்போ?" அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து அதில் இருந்து கேள்வி கேட்பவரை ஆச்சர்யமாக பார்த்தாள் தமிழ்செல்வி.

"இங்க ஹை கோர்ட் ஜட்ஜ் வீட்ல அவங்க அம்மாவுடைய கேர் டேக்கரா இருந்தேன்" தமிழ்செல்வி சொல்லவும், "ஓஒ..ஒரு வாரம் முன்ன இறந்துட்டாங்களே...அதான் வேலை செய்துட்டு இருந்தேன்னு சொன்னியா?" பாட்டி கேட்டார்.

"ஆமாம் பாட்டி. சம்பள பணம் வாங்கிட்டு போக வந்தேன்.வாங்கிட்டு போகும் போது தான் உங்களை பார்த்தேன்" தமிழ்செல்வி சொல்லவும் "ஓ..."என்றவர் "இந்த வீடு தான் செல்வி" எனவும் அந்த வீட்டை பார்த்தாள். அந்த பகுதியே விஐபிகளின் ஏரியா ஆனாலும் இவர்களது வீடு, இல்லை இல்லை அந்த அரண்மனை  இன்னும் பெரிதாக இருந்தது.

"சரி பாட்டி நான் கிளம்பறேன். நீங்க பார்த்து போங்க" அந்த வீட்டின் வாயில் அருகே நின்றவள் விடைபெறும் முறையாக சொல்ல, "என்னது கெளம்பரையா? எனக்கு ஹெல்ப் பண்ணிட்டு வீட்டுக்குள்ள கூட வராம போக விட்டுடுவேனா? நீ முதல்ல உள்ள வா" என அவளையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றார்.

அந்த பெரிய வீட்டின் வரவேற்பறையில் இருந்த சோபாவில் அவளை அமர வைத்தவர் உள்ளே நோக்கி குரல் கொடுத்தார்.

"பாக்கியம்..." அழைத்து விட்டு அவளை பார்த்தவர் "என்ன செல்வி சாப்பிடற? காபி, டீ , ஜூஸ்? என்ன புடிக்கும்?" விசாலம் கேட்க, "இல்லை பாட்டி அதெல்லாம் ஒன்னும் வேணாம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.