(Reading time: 11 - 21 minutes)
Priyamaanavale
Priyamaanavale

நீயும் வேலை தேடிட்டு இருக்கேனு சொல்றியே...அதான் கேட்டு பாக்கலாமேன்னு..."எத்தனை வசதி இருந்தும் தனிமையும் துணை இல்லா முதுமையும் அவரை எந்த அளவு வதைக்கிறது என புரிந்தது செல்விக்கு.

"ஏன் பாட்டி இப்போதான் என்னை பாத்திங்க. என்னை பத்தி எதுவும் விசாரிக்காம வேலைக்கு சேர்த்துருக்கறேன்னு சொல்றிங்க? உங்களை மாதிரி வசதியான வயதானவர்களை ஏமாத்தவே நெறய பேரு சுத்திட்டு இருக்காங்க தெரியுமா?" தமிழ்செல்விக்கு அவர் அவசரப்படுகிறாரோ என தோன்றியது.

"அப்படி ஏமாத்தற யாரும் இப்படி கேள்வி கேக்க மாட்டாங்க" என சிரித்தவர் "எனக்கு எழுபது வயசு மேல ஆகுது...என் அனுபவத்துல யாரு எப்படினு கொஞ்சநேரம் பேசுனாலே கண்டுபிடிக்க முடியும். எனக்கு இந்த மாதிரி வேலைக்கு ஒரு ஆள் வேணும்னு தோணுனது இல்லை. ஏதோ உன்னை பார்த்ததும் எனக்கு பிடிச்சிருக்கு செல்வி. உன் கூட பேசறதுக்கு நல்லா இருக்கு. நீ நெறய விஷயம் தெரிஞ்சு வெச்சுருக்க. உன்னோட பேசுனா நேரம் போறதே தெரியாது. அதான் சட்டுனு கேட்டுட்டேன். உனக்கு விருப்பம் இருந்தா சரி சொல்லு. இல்லைனாலும் பரவால்லை. நம்ம பிரெண்ட்ஸா இருப்போம்" என்று முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்புடன் அவளின் கைகளை வருடியபடி சொன்னவரிடம் மறுக்க முடியவில்லை செல்விக்கு. அதே நேரம் இங்கு என்ன வேலை இருக்க முடியும்? எதுவும் செய்யமல் வெறுமனே பேசிக்கொண்டிருக்க அவர் சம்பளம் தரலாம் ஆனால் அதை கைநீட்டி நான் எப்படி வாங்குவது? என யோசித்தவள் அதை அவரிடம் கேட்கவும் செய்தாள்.

"என்ன நீ இப்படி சொல்லிட்ட? இங்க உனக்கு நெறைய வேலை இருக்கும். நீயே பாரு. உனக்கு உக்கரவே நேரம் இருக்காது" அவள் இன்னும் யோசிக்க, "சரி ஒரு மாசம் வந்து பாரு. பிடிக்கலையா வேற வேலைக்கு நானே ஏற்பாடு பண்றேன் போதுமா?" அவர் அவ்வளவு தூரம் சொல்லும்போது அதற்க்கு மேல் எதுவும் பேசாமல் நாளை முதல் வேலைக்கு வருவதாக சொல்லிவிட்டு விடைபெற்றாள் செல்வி.

தமிழ்செல்வி வீட்டு வாசலை திறக்கும் போதே வாசலில் அமர்ந்திருந்தார் கலைவாணி.

"அம்மா ஏன் பனில உக்காந்திருக்கிங்க? " என்றபடி அவரிடம் சென்றாள் தமிழ்செல்வி.

"இல்லைடா தமிழ் நீ இன்னும் காணோமே அதான் பார்த்துட்டு இருந்தேன். நீ போய் கைகால் கழுவிட்டு வா. நான் டீ கொண்டு வரேன்" என்றபடி அந்த இரண்டு படுக்கை அரை வசதி கொண்ட வீட்டின் சமயலறைக்குள் நுழைந்தார். அது ஒன்று தான் அவர்களுக்கு என்று இருக்கும் ஒரே சொத்து.

உள்ளே நுழையும் போதே காவ்யா அமர்ந்து ஏதோ எழுதி கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.