(Reading time: 8 - 15 minutes)

தலையில் கட்ட அதைப் பார்த்து சரவணனும் சூர்யாவும் சிரிக்கவென அந்த நிமிடம் கலகலப்பாக சென்றது.

சூர்யா ரிந்து வந்திருப்பது தெரிந்து.. சந்தோஷ் அவர்களது பரிசுப் பொருட்களுடன் வந்தான்.. உள்ளே வந்தவன் நேராக சூர்யாவின் அருகில் அமர்ந்து அவனிடமே பேசிக் கொண்டிருக்க..

சந்தோஷ் அண்ணா திஸ் இஸ் டூமச்.. அப்பா என்னடானா என்னை கண்டுக்காம அவரோட மாப்பிள்ளை பின்னாடியே போறாரு.. இப்போ நீங்களும்..” என பொய் கோபத்துடன் ரிந்து முகத்தை திருப்பிக் கொள்ள..

ப்ரியாமா நான் சும்மா உன்னை சீண்டினேன் டா.. அதும் ரொம்ப நாள் களிச்சுப் பார்க்கிறநால.. பாரு உனக்கான கிஃப்ட்ஸ் நேர்லேயே தரனும்னு தான் இந்நேரத்துல வந்திருக்கேன்..” என சமாதானம் செய்ய முயல.. அப்பொழுதும் முறுக்கிக்கொள்ள..

அக்கா உனக்கு வேண்டாம் என்றால் உன்னோடதும் நான் எடுத்துக்கறேன்..” என வேண்டும் என்றே கூற.. ஷைலு தான் அவர்களிருவரும் வந்திருப்பதாக சந்தோஷிற்கு டெக்ஸ்ட் அனுப்பியிருந்தாள்.

ஏய் வாலு இது அண்ணன் எனக்கு தந்தது.. இதை உனக்கு தரமாட்டேன்டி..” என சிரித்துக் கொண்டே சந்தோஷிடமிருந்து பெற்றுக் கொண்டாள்.

அம்மா அப்பா எப்படி இருக்காங்க சந்தோஷ்.. நானும் நீ ஊருல இருந்து வந்த உடனே வரனும் நினைச்சேன் ஆனா வேலை ஜாஸ்த்தி.. அதான் வர முடியலை.. சாரி டா..” என்று சூர்யா லேசாக வருத்தப் பட..

அவங்க நல்லா இருக்காங்க டா.. ஒன்பது மணி எல்லாம் தூங்கற நேரம் அவங்களுக்கு அதான் இப்போ வரலை.. இல்லைனா ரெண்டுப் பேரும் இப்போ இங்க தான் இருந்திருப்பாங்க.. ஆல்சோ நீ ஃபீல் பண்ணாத சூர்யா.. நீங்க இப்போ வரலைனாலும் நானே அடுத்த வாரம் அங்க வீட்டுக்கு வந்திருப்பேன்.. சோ ச்சில் மேன்என அவனை தோளோடு அணைத்துக் கொண்டான்.. இருவரும் சமவயது ஆதலால் இந்த இரண்டு ஆண்டுகளில் இருவரிடமும் ஒரு நல்ல தோழமை உருவாகியிருந்தது.

மாப்பிள்ளை நீங்க சாப்பிட்டீங்களா இல்லையா..” என சரவணன் விசாரிக்க..

மாமா நாங்க மூணுப்பேரும் டின்னர் முடிச்சுட்டுதான் கிளம்பினோம்.. அதான் லேட் ஆயிருச்சு.. சரி இப்போ நானும் ரிந்துவும் கிளம்பறோம் மாமா.. ஆல்ரெடி லேட்.. அடுத்த வாரம் ஃப்ரீயா வறோம்..” என விடைப் பெற எத்தனிக்க.. இவர்கள் பேச ஆரம்பிக்கும் பொழுதே ஷைலுவையும் இழுத்துக் கொண்டு கிட்ச்செனினுள் சென்றவர் கைகளில் ட்ரே உடன் வந்தார்..

இருங்க இருங்க.. எங்க ஒன்னுமே சாப்பிடாம கிளம்பறீங்க.. அட்லீஸ்ட் ஜூஸாச்சு குடிங்க..”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.