(Reading time: 8 - 16 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

" காயத்ரி! ஏன் அம்மா மௌனமாய்ட்டாங்க?"

" ஐயா! எங்களுக்கு நல்ல தந்தை அமையவில்லை! அப்பா எங்கம்மாவுடன் பத்தாண்டுகள் நல்லபடியாக வாழ்ந்துவந்தவர், என்னையும் மாதவியையும் பாசத்தோடு வளர்த்தவர், திடீரென ஒருநாள் அம்மாவை அடித்து நொறுக்கிவிட்டு எங்களை வீட்டைவிட்டு துரத்திவிட்டார்."

அதற்குள், கண்ணகி சுதாரித்துக்கொண்டு, பெண்கள் இருவரையும் உள்ளே போகச் சொல்லிவிட்டு, பேசினாள்.

" ஐயா! என் கணவர், வெளிநாட்டில் வேலை செய்து, நிறைய சம்பாதித்து நாடு திரும்பியவர், என்னை விரும்பித்தான் திருமணம் செய்துகொண்டார். பத்து ஆண்டுகள் சிறப்பாகத்தான், குடும்பம் நடந்தது!

விதிவசமாக, ஊரிலுள்ள எவரோ விஷமத்தனமாக, அவரிடம், என்னைப்பற்றி தவறாக சொல்லியதைக் கேட்டவர், மனம் மாறி, எங்களை வீட்டை விட்டு துரத்திவிட்டார்.

அப்படி அவரிடம் தவறாக சொல்லப்பட்ட அவதூறு கற்பனை கதையில் உங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது........."

" எனக்கா? எனக்கு உன்னை தெரியவே தெரியாதே..........."

" நீங்க சொல்வது சத்தியம்! நான் ஒழுக்கமானவள் என்பதும் சத்தியம்! ஆனால், என் கணவரிடம், அவதூறாக கதை கட்டியவர்கள், சாமர்த்தியமாக, உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை பிணைத்துவிட்டார்கள்!

ஆம், ஐயா! என்னை நீங்கள் அந்த ரௌடியிடமிருந்து காப்பாற்றிய சம்பவத்தை, கருவாக வைத்து, நான் நிர்வாணமாக நடுத்தெருவில் பட்டப்பகலில் கிடந்ததையும் அப்போது நீங்கள் என்னை காப்பாற்றியதையும் பிணைத்து, நமக்கிடையே தொடர்பு இருந்ததாக கதை கட்டிவிட்டனர்.

என் கணவரிடம், நான் அந்த சம்பவத்தை, திருமணத்திற்கு முன்பே தெரிவிக்காத காரணத்தால், அதை எனக்கு எதிராகத் திருப்பி, என் கணவர் என்னையும் நான் பெற்ற பெண்களையும் வீட்டைவிட்டு விரட்டிவிட்டார்.

அது மட்டுமல்ல, வேறொருத்தியை திருமணமும் செய்து கொண்டுவிட்டார்.........."

" விவாகரத்து ஆகிவிட்டதா? உனக்கு ஜீவனாம்சமாக மாதாமாதம் பணம் தருகிறாரா?"

" அதெல்லாம் எதுவும் நடக்கவில்லை, நானும் அதைப்பற்றி, சிந்திக்கவேயில்லை.

என்னையும் என் பெண்களையும் விரட்டியவருடன் வாழ்வதையோ, அவரிடமிருந்து பணம் பெறுவதையோ, நான் வெறுக்கிறேன். அப்படி மானங்கெட்டு வாழ்வதைவிட, பட்டினி கிடந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.