(Reading time: 8 - 16 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

இந்த உலகத்திலேதான், புராண காலத்திலேயே, கற்புத்தெய்வம் சீதாபிராட்டியோட கற்பையே சந்தேகப்பட்டு, கர்ப்பிணியா இருந்தவளை காட்டுக்கு விரட்டினாங்க! பிறகு, அதே சீதாபிராட்டியை தெய்வமா கொண்டாடறாங்க!

அப்புறம், ஏசுநாதரை கல்லால் அடிச்சு சிலுவையிலே அறைந்தாங்க, பின்பு, அவரையே தெய்வமா கொண்டாடறாங்க, உலகம் முழுவதும்!

என்னைப்பற்றி பேச, உனக்கென்ன தகுதி இருக்கு?

நீ யோக்கியமானவனாயிருந்தால், சட்டத்தை மதிக்கவனாயிருந்தால், என்னை விவாகரத்து செய்திருக்கணும், ஏன் செய்யலே?

எனக்கு ஜீவனாம்சப் பணம் மாசாமாசம் தரணும், 'என் மகள்'னு சொந்தம் கொண்டாடறியே, அவங்க கல்யாணத்துக்கு பணம் தந்திருக்கணும், அதுக்குப் பயந்துகொண்டு, இன்னொருத்திக்கு திருட்டுத்தாலி கட்டியிருக்கே!

உன்மீது வழக்குப் போட்டு உன்னை உள்ளே தள்ள, என்னாலே முடியும், அதனாலே என் நேரம்தான் வீணாகும்! உன் காசிலே பசியாறுவதைவிட, விஷத்தை குடித்து சாகலாம்!

இதோ நிக்கறாரே, இவர் காலிலே விழுந்து கும்பிட்டுவிட்டுப் போ! நல்ல புத்தி வரும்!

போய்யா! போய், ரெண்டாவதா கட்டிக்கிட்டவளையாவது நல்லபடியா நடத்து!

ஊரிலே எவனோ அவதூறா பேசினான்னு, அவளையும் அடிச்சு துரத்திடாதே! பெண்பாவம் பொல்லாது! போய் வேலையைப் பாரு, இல்லே, கமிஷனருக்கு போன் பண்ணி, என்னை கொல்ல, கத்தியோட வந்து நிக்கிற உன்னை கொலைக்குற்றத்திலே உள்ளே தள்ளச் சொல்லட்டுமா?"

அவள் கணவன் ஓரளவு விஷயம் தெரிந்தவன்! மௌனமாக தலை குனிந்து, வெளியேறினான்!

கண்ணகி தன் கணவன் திரும்பிச் செல்வதை பார்த்து சிரித்துவிட்டு, திரும்பினாள்!

கைப்பையுடன், சகாதேவன் வெளியேற தயாராக நின்றுகொண்டிருந்தான்!

காயத்ரியும் மாதவியும் அவரை தடுக்க ஓடிவந்தனர்!

" அவரை தடுக்காதீங்க! அவர் போகட்டும்! நம்மாலே அவருக்கேன் வீண்பழி!

அவர்தான் நமக்கு தைரியம் சொல்லிக் கொடுத்திருக்காரே! நமக்குள்ளே இருக்கிற மகாசக்தியை நம்பி வாழ்வோம்!

ஐயா! ஒரே ஒரு வேண்டுகோள்! நீங்க எங்க போறீங்க, யாரோட வாழப்போறீங்க, நாங்க உங்களை எங்க வந்து பார்க்கலாம்னு மட்டும் சொல்லிட்டு கிளம்புங்க!"

" ஆமாம், ஐயா!" என்று காயத்ரியும் மாதவியும் கோரஸ் பாடினர்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.