(Reading time: 9 - 18 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 04 - ஜெய்

வர்கள் வந்து ஆட ஆரம்பித்ததில் இருந்து ஒரு பெண் இவர்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்...  எட்டிலிருந்து ஒன்பது வயதிற்குள் இருக்கும்... தன் தந்தையுடன் அந்த மைதானத்தை சுற்றி நடக்க வந்தவள் மைத்தியின் பேச்சில் கவரப்பட்டு  அவர்கள் விளையாடும் இடத்திற்கு அருகில் அமர்ந்துவிட்டாள்... மைத்தி பந்து தடுக்கும் முறையும், அவளின் கேட்ச் பிடிக்கும் முறையும் அவளை மிகவும் கவர்ந்தது.... அனைத்தையும் விட அவளின் வாயை பிளக்க வைத்த விஷயம் மைத்தியின் பந்து வீசும் திறன்...

சீனு விளையாடுவதை முதலில் இருந்து பார்த்திருந்ததால் அவன் திறமையான பேட்ஸ்மேன் என்று கணித்திருந்தாள்... மைத்தி பந்து வீச வந்தவுடன், அச்சோ இந்த அக்கா போடற பாலை அந்த அண்ணா சிக்ஸ் அடிச்சுற போறார்... பாவம் அக்கா அழப்போறாங்க... என்று நினைத்தபடியே இருக்க... நடந்ததோ வேறு... சீனுவால் அவளின் ஒரு பந்தைக் கூட தொட முடியவில்லை.... மைத்தியை விட அதிக சந்தோஷம் அந்த குட்டிப்பெண்ணுக்குத்தான்.....

இவர்கள் விளையாடி முடித்தவுடன்  துள்ளி குதித்து மைத்ரேயியின் அருகில் ஓடினாள்....

“அக்கா செம்ம சூப்பரா விளையாடினீங்க... அதுவும் அந்த கடைசி பால் செம்ம.... பால் வந்ததை பார்த்து நான்கூட அந்த அண்ணா ரன் அடிச்சுருவாருன்னு நினைச்சேன்... ஆனா கடைசி நேரத்துல பந்து அப்படியே திரும்பி ஸ்டம்ப்புல பட்டுடுச்சு.... எப்படிக்கா போட்டீங்க....”, அந்த குட்டிப்பெண் குதித்தபடியே கேட்க, மைத்தியின் முகம் பூரிப்பில் மலர்ந்தது...

“அது விரலை இந்த மாதிரி திருப்பி போட்டேன்னு வைய்யேன்... பந்து சுத்தி போய் பிட்ச் ஆகி அப்படியே டர்ன் ஆகும்... நானே இந்த வித்தையை போன வாரம்தான் கண்டுபிடிச்சேன்....”, தன் பாட்டி முறுக்கு சுற்றுவதை பார்த்து தான் கண்டுபிடித்த வித்தையை பெருமையாக கூறினாள்....

“சூப்பர்க்கா எனக்கும் கிரிக்கெட் விளையாட பிடிக்கும்... சொல்லித் தர்றீங்களா..... நான் அப்பாக்கூட இங்க அடிக்கடி நடக்க வருவேன்... அப்போ சேர்ந்து விளையாடலாம்... எங்க அப்பாக்கூட கிரிக்கெட் பிளேயர்தான் ... அவரோட ஆபீஸ்ல வேலை பார்க்கறவங்களோட நிறைய மேட்ச் விளையாடுவார்....”

“உன்னோட பேர் என்ன பாப்பா...”

“துளசிண்ணா....”

“துளசி பாப்பா இந்த அக்கா ஏதோ ஃப்ளுக்ல இன்னைக்கு என்னை அவுட் பண்ணிட்டா... உடனே நீ அவளை கபில்தேவ் ரேஞ்சுக்கு நினைச்சுக்காத.... இதுவே ஒரு முக்காப்படி இதுக்கு ஒரு அரைக்க்காய்ப்படி சிஷ்யை வேற...”, சீனு கூற,  சுற்றி இருந்தவர்கள் சிரிப்பை அடக்கினார்கள்... மைத்தி அவனை முறைத்தாள்...

“போங்கண்ணா நான்தான் பார்த்தேனே... உங்களால அக்காவோட ஒரு பாலைக் கூட தொட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.