(Reading time: 9 - 18 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

“இது நானே எழுதினதுதான்... சில இடங்கள்ல மட்டும் கஸ்தூரி மாமா கரெக்ட் பண்ணினார்...”

“உண்மையை அப்படியே சொல்றியே... நல்ல பொண்ணும்மா நீ.. சரி ஆரம்பி பார்க்கலாம்... மக்களே வாங்க மைத்ரேயி அவங்களுக்கு பிடிச்ச விளையாட்டை  பற்றி பேசறதை கேட்கலாம்....”, வானொலி அண்ணா அறிவிக்க மைத்தியும் தான் எழுதிய கட்டுரையை அழகாக ஏற்ற இறக்கங்களுடன் பேச ஆரம்பித்தாள்...

“ரொம்ப அழகா பேசினம்மா... எந்த வகுப்பு படிக்கற...”

“நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன் ஐயா...”

“சந்தோஷம்மா... வருங்காலத்துல நல்ல பேச்சாளரா வருவ... இப்போவே அது நல்லாத் தெரியுது....”

“அச்சோ இல்லை ஐயா... நான் பெரிய கிரிக்கெட் பிளேயராத்தான் ஆவேன்... அதுதான் என்னோட கனவு...”

“அடடே கிரிக்கெட் பிளேயரா ஆகப்போறியா... முதல் முறையா ஒரு பெண் இதை சொல்லக் கேக்கறேன்... ரொம்ப சந்தோஷமா இருக்கு... உன்னோட கனவுகள் நிறைவேற என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்... வருங்காலத்தில்  நீ விளையாடறதை நான் வர்ணனை செய்வேன்னு நம்பறேன்....”, வானொலி அண்ணா திரு.கூத்தபிரான் வாழ்த்த மைத்தியை கையில் பிடிக்க முடியவில்லை...

இவளின் அலப்பறையை அவர்கள் வீட்டு ரேடியோவில் அனைவரும் கேட்டு  மகிழ்ந்தனர்...

“இந்த மைத்திக்குட்டியோட அலட்டல் தாங்கலைடி சாமளா... இந்த கத்துக்குட்டி ஆட்டத்தை வச்சுண்டு என்னமோ இந்தியா டீம்லையே செலக்ட் பண்ணிட்டா மாதிரி பேசிண்டு நடக்கறதே,,,”, சுப்பிரமணியம் தாத்தாவிற்கு சிரிப்பு தாளவில்லை...

“சும்மா இருங்கோன்னா.... குழந்தை இன்னும் விளையாடப் போறதே கொஞ்ச நாள்தான்... எல்லாம் திரண்டுகுளி வரைதான்.... அதுக்கப்பறம் எங்க இருந்து விளையாடப் போப்போறா....”

“அதுவும் சரிதான்... சரி இன்னைக்கு குழந்தைகள் வந்தோண, எல்லாத்துக்கும் சுத்தி போடணும்... மணி மணியா பேசி பாடி இருக்குகள்...”, தாத்தா சொல்ல அதை ஆமோதித்தபடியே  தங்கள் பகுதிகளுக்கு  சென்றனர்....

 

அடுத்த சில மாதங்கள் மைத்தியின் கிரிக்கெட் விளையாட்டு தொடர்ந்தது...  மைத்தியின் பந்து வீசும் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றது... அதே போல் துளசியுடையதும்... அவளின் தந்தைக்கே அவளின் திறமை புதியதாக இருந்தது... தன் மகள் இத்தனை சிறப்பாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.