(Reading time: 8 - 16 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

உன் வயத்திலே பிறந்த நான், பிற்காலத்திலே உன்னைப்போல, தாயை மறந்து பணமே பிரதானமா வாழ்ந்தால், உன் மனசு என்ன பாடுபடும்னு யோசித்துப் பாரும்மா'ன்னு என் பொட்டிலே அறையறாமாதிரி கேட்டான்.....( அழுதாள்).....

அவன் கேட்டதிலே என்ன தப்பு சொல்ல முடியும்?....."

மறுபடியும் தங்கைகள் மூவரும் உண்மையை உணர்ந்து, தலை குனிந்து, கண்ணீர் உகுத்தனர்.

"அக்கா! அப்பா - அம்மா இருக்கிற இடம் எனக்குத் தெரியும், ரஞ்சித் நேற்றுதான் சொன்னான், 'காந்தி முதியோர் இல்லம்'!

கையிலிருந்த லட்சக்கணக்கான பணத்தை செலவுபண்ணி நம்ம நாலுபேருக்கும் கல்யாணம் செய்துவைத்தாங்க! குடும்ப சொத்தையும் நாம பிடுங்கிக்கொண்டு, பிரிந்து வந்துட்டோம்.

அவங்களை அனாதையாக்கினதை அந்தக் கடவுள்கூட மன்னிக்கமாட்டார். சண்முகம் சொன்னதிலே தப்பே இல்லே, நீங்க யார் வரீங்களோ இல்லையோ, நான் இப்பவே கிளம்பி ஓடிப்போய் அவங்க கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கப் போறேன்... "

அந்தக் கணமே, மற்ற மூவரும் கொரோனா ஊர் காவல் தடுப்பைமீறி, புறப்பட்டனர்.

எது, எங்கே, எப்போது நடக்கும் என்று அறிந்தவர் யார்?

சகாதேவன், குரங்குகளின் பசியை தீர்த்துவிட்டு, அடுத்து தான் எங்கே செல்வது, என யோசித்தார்.

அருகிலிருந்த பஸ் ஸ்டாண்ட் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

பெற்றவங்க இப்ப எங்கே இருப்பாங்கன்னு, முன்பு தான் வாழ்ந்த வீட்டிற்குப் போய் விசாரிக்கலாமா?

சரி, விசாரித்து, விலாசம் தெரிந்தபின், அவர்களை சந்திப்பது அவசியமா, சரியா என யோசித்தார்.

ஒன்றா, இரண்டா, பதினெட்டு ஆண்டுகளில் என்னவெல்லாமோ நடந்திருக்கும்! நான்கு மூத்த சகோதரிகளுக்கும் திருமணம் ஆகியிருக்கும்!

அவர்களில் ஒருவருடன்தான், பெற்றோர் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்!

ஆமாம், இத்தனை ஆண்டுகளில் ஒருவர்கூட, ஒருமுறைகூட, தன்னை வந்து ஒப்புக்காகவேனும் பார்த்திருக்கலாமே, பார்க்கவில்லையே!

ஆம், அவர்கள் தன்னை அயோக்கியன், ரௌடி, என்று வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள்!

தன்னைப்பற்றி தங்கள் கணவன்களிடம் தெரிவித்தார்களோ இல்லையோ!

இந்த நிலையில் தான் அவர்கள் முன்பு, நின்றால், அவர்கள் எப்படி தன்னை ஏற்பார்கள்?

அவர்கள் ஏற்றுக்கொள்ளாதபோது, பெற்றவர்கள், பிள்ளையை பார்க்க முடியவில்லையே என

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.