(Reading time: 6 - 12 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

வந்தபிறகும் நம்மாலே கஷ்டம்னா, கடவுள்கூட நம்மை மன்னிக்கமாட்டார், அக்கா!"

" வத்சலா! நீ ஏதாவது ஐடியா வச்சிருப்பியே, சொல்லு!"

" ஐயோ அக்கா! போன் பண்ணி இந்த பிரச்னையை எழுப்பினதே நான்தான்! எனக்கு ஒரு கூடுதலான பிரச்னை!"

" அதென்னடீ, கூடுதலான பிரச்னை?"

" ராத்திரி, இந்தக் கவலையிலே, புரண்டு புரண்டு படுத்தேனா, ரஞ்சித்துக்கு சந்தேகம் வந்து துளைத்து எடுத்துட்டான், தப்பிக்க முடியலே, உண்மையை சொல்லிட்டேன், இப்ப அவன் வேறே, இம்சை பண்றான்...."

" நல்லவேளை! நாங்க யாரும் அந்த தப்பை பண்ணலை......."

" நீங்க பண்ணாட்டா என்ன? ரஞ்சித் இந்த நேரத்துக்கு மூணு சகலைகிட்டேயும் விஷயத்தை ஷேர் பண்ணியிருப்பான்......."

"ஐயையோ! குடி முழுகிப்போச்சே! கொரோனாவைவிட, வேகமா பரவிடுச்சே, நிர்மலா, விமலா! ஏன்டீ, அமுக்குனு உட்கார்ந்து மௌனமாயிருக்கீங்க, பேசுங்கடீ..........."

" அக்கா! சொல்றோமேன்னு தப்பா எடுத்துக்காதே! உனக்கு எப்பவும் ஒரு அவசரபுத்தி! அப்பா - அம்மாவை நம்மோட அழைச்சிண்டு போறோம்னு சொன்னாமாதிரியே, அந்த காப்பாளர்கிட்டே, வீண் டம்பத்துக்கு, பெருமைக்கு, நாப்பது லட்சம் தரோம்னு சொல்லித் தொலைச்சுட்டே....."

" தப்புத் தான்டீ...மன்னிச்சுடுங்கடீ!"

" அண்ணா, மன்னியெல்லாம் பயன் தராது, சும்மா இல்லே, நாப்பது லட்சம்! ஆமாம், அதென்னக்கா! உனக்கு பத்து லட்சங்கறது, பத்து பைசா மாதிரி இருக்கா?"

" அல்லது, தினமும் இந்த 'சன் ஃபௌன்டேஷன்' கோடிக்கணக்கிலே டொனேஷன் தராப்பலே, நீயும் தந்துண்டிருக்கியா? சொல்லுக்கா!"

" உளறித் தொலைச்சுட்டேன், காப்பாத்துங்கடீ!"

" நம்ம நாலு பேருக்கும் ஒண்ணும் ஐடியா கிடைக்கலே, நம்ம சேர்த்துண்ட ஆம்பளைங்களை யோசனை கேட்போமா?"

" அதென்னடீ, நம்ம சேர்த்துண்ட ஆம்பளை, அது இதுன்னு தப்பா பேசறே? லட்சக்கணக்கிலே செலவு பண்ணிய கல்யாணத்திலே பலபேர் அறிய நம்ம கழுத்திலே தாலி கட்டின புருஷங்கடீ!"

" இப்ப அதுவா, பிரச்னை? தேர்தல் வாக்குறுதி மாதிரி, அள்ளி வீசிட்டே! கொரோனா ஊரடங்கு சட்டத்திலேகூட, அந்த காப்பாளர், நம்ம வீட்டுப் படியேறி வந்து, தினமும் கழுத்தறுப்பானே! என்ன சொல்றது, அவமானம்!"

"ஆங்! ஐடியா கிடைச்சுடுத்து......"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.