"நிர்மலா! நீ போனபிறகு என்னாச்சு தெரியுமோ?"
" சொல்லு, சொல்லு! நானே உனக்கு போன் பண்ணணும்னு இருந்தேன்..."
" நாம போட்ட நாடகம் கிராண்ட் சக்சஸ்! எதிர்பார்த்தது போலவே, அப்பா - அம்மாவே, 'வரலே, நாங்க இங்கேயே இருந்துக்கறோம்'னு சொல்லிட்டாங்க, ஆனா பாவம்! அவங்க மனசு ஒடிஞ்சு அழுதுகொண்டே சொன்னபோது, எங்களுக்கே மனசுக்கு கஷ்டமாயிருந்தது!"
" அதுக்குனு நாம என்ன பண்றது, சொல்லு! அவங்க அவங்களுக்குனு ஒரு குடும்பம், வரவு - செலவு, உறவு அமைந்தபிறகு, புதுசா சுமையை இழுத்துவிட்டுக்க முடியுமா? அதனாலேதான், பெற்றவங்களை காப்பாற்ற பொறுப்பை காலம் காலமா, மகனுக்கு கொடுத்தாங்க!"
"வேடிக்கை என்ன தெரியுமோ? ஒரு நிலையிலே, அக்கா ஆடிப் போயிட்டாங்க........."
" அவங்களுக்கு மனசு இப்படியும் அப்படியுமா ஊசலாடுது, ஒருசமயம் தர்மம், நியாயம்னு பேசி காரியத்தை கெடுத்துடறாங்க, மறுசமயம் 'ஐயையோ! தப்பு பண்ணிட்டோமே, எப்படி மீளுவதுன்னு' திகைக்கறாங்க!........அப்படித்தான் நாலுபேர் நடுவிலே, 'இன்னிக்கே அப்பா - அம்மாவை நாங்க அழைச்சிகிட்டு போகப்போறோம்'னு உளறிட்டாங்க........"
" நான் சொல்லவந்தது அது இல்லே, வத்சலா போட்ட போடுலே, எங்கே கடைசிலே தன் தலையிலே அவங்களை நிரந்தரமா காப்பாத்தற பொறுப்பு விழுந்துடுமோன்னு பயந்துட்டாங்க........"
இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள்.
அப்போது, இருவருக்கும் வத்சலாவிடமிருந்து கான்ஃபெரன்ஸ் கால் அழைப்பு வந்தது!
" ஏய் வத்சலா! ஜமாய்ச்சுட்டே! என்ன இருந்தாலும், போலீஸ் கமிஷனர் மனைவியாச்சே!"
" இப்படி இதையே சொல்லிச் சொல்லி என்னை கவுத்துறாதீங்க! உங்க கூட்டணியிலிருந்து என்னை கழட்டி விட்டுடாதீங்க! இப்ப நான் எதுக்கு போன் பண்ணினேன்னா, அந்த நாப்பது லட்சம் டுபாக்கூர் டொனேஷனிலிருந்து எப்படி கழளப் போகிறோம்? அதை நினைச்சே, ராத்திரி தூக்கம் போச்சு!"
" ஆமாம்.....கொஞ்சம் இரு, அக்காவையும் லைன்லே கூப்பிடறேன்...."
" குட் மார்னிங்! என்ன காலங்கார்த்தாலேயே, மாநாடா? சொல்லுங்க!"
" அக்கா! இப்ப எங்க கவலையெல்லாம், ஜம்பத்துக்கு பெருமையா நாப்பது லட்சம் நன்கொடை தரோம்னு சொல்லிட்டோமே, அதிலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம்?"
" பெரிய சிக்கல்லேதான் மாட்டியிருக்கோம், ஏன்னா, அங்கே தொடர்ந்து இருக்கிற நம்ம அப்பா - அம்மாவை அந்த காப்பாளர் பிடுங்கி எடுத்துடுவானே?"
" ஆமாம், அக்கா! நாம அங்கே போனதினாலேயும் அவங்களுக்கு மனசு கஷ்டம், இப்ப திரும்பி
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Thank you.
Worse criminals are around, WE HAVE TO BE VIGILANT is the message! Thanks!
Thanks for the comments! People without compunction can be found all over and we writers bring the malady to the notice of the readers for the needful!