(Reading time: 10 - 20 minutes)
Priyamaanavale
Priyamaanavale

நித்யாவிற்கு ராமை மணக்க இருந்த எண்ணம் அவருக்கு தெரியும். அழகு, படிப்பு என எதிலும் அவளுக்கு குறையில்லை. ஆனால் ராம் மற்றும் நித்யா இருவரும் மணந்தால் அந்த வாழ்க்கை சந்தோசமாக இருக்காது என அவருக்கு புரிந்திருந்தது. இருவரது குணங்களும் ஒரே போல, அதே பிடிவாதம், சுயகவுரவம், ஈகோ என எல்லாமே அப்படியே இருந்தது. இப்படி பட்ட குணங்கள் இருக்கும் இருவரும் நீண்ட காலங்கள் சந்தோசமாக சேர்ந்து வாழ முடியாது என அவருக்கு தெரியும். ராம் தமிழ்செல்வியை மணந்தால் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என அவரின் மனதில் தோன்றியது. அதை உறுதி செய்வதை போல ராமே அவளை மணக்க விருப்பம் தெரிவித்தது அவருக்கு பழம் நழுவி பாலில் விழுந்ததை போல இருந்தது. ஆனால் ராமுக்கு நித்யாவை மனக்காமல் வேறு பெண்ணை பார்த்ததை அறிந்து கோபம் கொண்டு மீனாட்சி திருமணத்திற்கு வரவில்லை. ஆனால் மீனாட்சியை பற்றி விசாலத்திற்கு தெரியும். அவரது கோபம் சிலநாட்களிலேயே வடிந்து விடும் என. ஆனால் நித்யா இப்படி வந்து நிற்பாள் என அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.  ராம் மனதிலோ இல்லை தமிழ்செல்வியின் மனதிலோ நித்யாவை பற்றி எதுவும் சொல்லி குழப்பம் உண்டாக்க விரும்பவில்லை விசாலம். ஒரு வேளை அவர்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இல்லாமல் இருந்தால் அதை உண்டாக்குவதை போல ஆகும் தான் போய் சொல்வது என நினைத்தார். நித்யா என்ன எண்ணத்துடன் வந்திருக்கிறாள்? எதற்க்காக இங்கேயே இருக்கும் கல்லூரியில் சேரவேண்டும்? யோசனையில் மூழ்கினார் விசாலம்.

"பாட்டி எப்படி இருக்கு?" டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த எல்லவருக்கும் உணவை பரிமாறிய தமிழ் ஆர்வமாக பார்த்தாள் விசாலத்தை.

"கலைவாணி உனக்கு சமைக்க தெரியாதுன்னு சொன்னா. ஆனா நீ ரொம்ப நல்லா சமைச்சிருக்கடா. நீ உக்காரு. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம். இங்க எல்லாரும் அவங்கவங்களுக்கு வேணும்ங்கறதை போட்டு சாப்ட்டுக்குவாங்க" விசாலம் சொல்லவும் தமிழ்செல்வி அமர்ந்தாள்.

சாப்பிட்டு கொண்டிருக்கையிலேயே, ராம் அங்கிருந்த உணவு பதார்த்தைதை எடுக்க கையை நீட்ட, அதை எடுத்து அவனுக்கு பரிமாற்ற சென்றாள் நித்யா.

"நித்யா, செல்வி பரிமாறட்டும். நீ சாப்பிடு..." விசாலம் சொல்லவும் "இல்லை பாட்டி எனக்கு பக்கத்துல இருக்கு அதான்." நித்யா சொல்ல, "ராமுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அவன் பொண்டாட்டி பக்கத்துலயே இருக்கா. அவ பார்த்துக்குவா. நீ சாப்டுட்டு எழுந்திரு" விசாலத்தின் குரல் அழுத்தமாக ஒலிக்க, தன்னுடைய கையில் இருந்த பாத்திரத்தை கீழே வைத்தாள் நித்யா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.