(Reading time: 11 - 21 minutes)
Nenchil thunivirunthaal

தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 13 - சகி

டந்தக்கால நினைவுகளிலிருந்து சட்டென வெளிவந்தவராய் கண்களிலான கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் இராகவன். மனம் முழுதிலும் இரணங்கள் மட்டுமே! அவ்வளவு பெரிய துரோகத்தினை எப்பெண்ணால் சகிக்க இயலும்?அன்று அவள் அவ்வளவு உரைத்துமே தன்னகந்தை கண்களினை மறைக்க, அதன் பிரதிப்பலன் இன்று வாழ்க்கை முழுதையும் இருளாக்கிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. மனைவி, மகன் என்ற செல்வங்களையும் பிரித்துச் சென்றது! ஒரு அப்பாவிப் பெண்ணின் சாபத்தையும் பெற வைத்தது. ஆயிரம் காரணங்கள் உரைத்தாலும் உடையான் என் புதல்வன் அல்லவா!! தன்னைத் தானே வஞ்சித்துக் கொண்டது அவர் மனம். அவன் எப்படி வளர்ந்திருப்பான் என்பதனைக் கூட ஊகிக்க இயலவில்லை. தந்தை எங்கே என்ற ஏக்கம் ஒருமுறையேனும் அவனுக்கு வராமலா சென்றிருக்கும்? ஆதித்யா தன் பாலக பருவத்திலாவது தந்தை அன்பினைப் பெற்றவன், மற்றவன், உற்றவன் உயிரோடு இருந்த சமயத்திலும் தவறிழைக்காமல் நிந்திக்கப்பட்டவன். என்னவென்று பாவ விமோசனம் பெறுவது? சிந்தித்துக் கொண்டிருந்தவரின் அறைக்கதவு திறவப்பட கண்களைத் துடைத்துக் கொண்டார் அவர்.

"இராகவா!" அகிலாண்டேஷ்வரியின் குரல் அவரை உலுக்க, மனதின் வேதனையை எல்லாம் மறைத்துக் கொண்டார்.

"மா?" என்று நிமிர்ந்தவரின் சிவந்த விழிகளே ஆயிரமாயிரம் கதைகளை எடுத்துரைத்தது அவருக்கு! ஆயினும், எந்தப் பழைய பஞ்சாங்கமும் இனி பயன்பட போவதில்லை என்பதில் அத்தாய் மனம் உறுதிக் கொண்டிருந்தது.

"உடையான் மலைக்கு போயிட்டு வந்துட்டான்! ஆதி, பிரசாதம் கொண்டு வந்துக் கொடுத்துட்டு போறான்." என்றதும் குழம்பிப் போனது அவர் மனம்.

"ஆதி வந்தனா? ஏன்..? ஏன் என்கிட்ட சொல்லாமல் கிளம்பிட்டான்?" என்ற தந்தையின் பதற்றம் தாயின் அன்பினை விடவும் அங்கு உயர்ந்து நின்றது. அவர் சிதறிய வினாவிற்கு பதிலளிக்க இயலாமல் தடுமாறினார் அகிலாண்டேஷ்வரி. தாயார் காரணம் உரைக்காத சமயத்திலும் ஒரு தந்தை உணர மாட்டாரா மகனின் விலகலுக்கான காரணத்தை! சட்டென உடைந்த மனதின் வலிகள் கண்ணீராய் வெளியேற துடிக்க, அதனை வெளிக்காட்ட விரும்பாமல் புன்னகைத்தார் அவர்.

"எதாவது முக்கியமான வேலையா இருந்திருப்பான்ல! விடுங்க...! நான் தோப்புக்குப் போயிட்டு வரேன்!" கசப்பான புன்னகையை விடுவித்துவிட்டு எழுந்துச் சென்ற மகனை நோக்கி வருந்தாமல் இல்லை அத்தாய் மனம்.

வழிநெடுக வைரங்கள்! உரிமைப்பாராட்ட இயலாது! இறுதி காலத்தில் கிரீயைகளை புரிய இரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.