(Reading time: 11 - 21 minutes)
Nenchil thunivirunthaal

வாரிசுகள் கர்ஜிக்கும் சிம்மங்களாய்! ஒருவனுக்கோ தந்தை மேல் காழ்புணர்ச்சி, மற்றொருவனுக்கோ தந்தை யாரென்பதே தெரியாது! சபிக்கப்பட்ட நிலையினை தன்னிலையின் மூலம் வரையறுத்துக் கொண்டார் இராகவன். தாயிடத்தில் தோப்பிற்கு சென்று வருகிறேன் என்று மன நிம்மதி தேடி ஆலயமே செல்ல துணிந்தது மனம்! அவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால், மனைவியும், மகன்களும் பிரிந்த பிறகு கடவுளைத் தவிரவும் வேறு எதனையும் நம்ப இயலவில்லை. எவ்வாறாவது சேர்த்து வைத்துவிடு என்பதனை விடவும், மன்னிப்பை பெற்றுத் தந்துவிடு என்பதே அவரது உச்சப்பட்ச வேண்டுதல்! காலணியும் அணியாமல் காலார நடந்த வண்ணம் இறைவனின் ஆலயத்திற்குள் நுழைந்தார் அவர். மதங்கள் ஆயிரம் ஆகிடினும் ஒரு இடத்தில் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு நாம் அவ்விடம் செல்லும் போது அவன் ஏனோ நம்மை நிராசை அடைய செய்வதில்லை. ஏனோ அவன் வசிக்கும் தலம் நம் இதயத்திலும் ஒன்று உள்ளது என்பதனை அறியவும் மறக்கிறோம். இறை நம்பிக்கையற்றிருந்தால் கவலை இல்லை. அவர்கள் மனதில் நம்பிக்கை நாயகனாக அவன் இல்லாமல் இல்லை. எண்ணியவண்ணம் வந்த காலடிகள் திடீரென நிற்க, பிரகாரத்தில் தன் அண்ணியார் மேற் படியில் அமர்ந்திருக்க, இரு படிகள் கீழிறங்கி தள்ளி அமர்ந்து, கரத்தில் பிரசாதத்தினை வைத்து சுவைத்துக் கொண்டு உரையாடிக் கொண்டிருந்தான் உடையான்.

"ஏன் அண்ணி? நீங்களும் தான் வீட்டில் சக்கரை பொங்கல் எல்லாம் செய்றீங்க! ஏன் கோவில்ல பண்ற மாதிரி வர மாட்டுது?" என்று அதனை சுவைத்த வண்ணம் அவன் வினவ, அவன் செவிகளை வலியுணராதப்படி திருகினாள் மாயா.

"ஆ...! வலிக்குது அண்ணி!" என்று எட்டி தாவியவன் அவள் பிடியிலிருந்துத் தன்னை விடுவித்துக் கொண்டு தன்  செவிகளை ஆசுவாசப்படுத்தினான்.

"எப்போ பார்த்தாலும் எங்களையே சொல்லு! நீயும் தான் இருக்கியே, அத்தைக்கிட்ட கங்காவைக் காட்டணும்னு கூட்டிட்டு வந்த, வந்து  இத்தனை நாளாகுது, அவக்கிட்ட ஒரு ஐ லவ் யூ கூட சொல்லலை நீ!" என்று தலையில் அடித்துக் கொள்ள, குழம்பிப் போனது இராகவனின் மனம்.

"நானா வேணாம்னு சொல்றேன். ஐயோ...அம்மாக்கிட்ட சொல்லலாம்னு பார்த்தா தூக்கிப்போட்டு மிதிப்பாங்களோன்னு பயமா இருக்கு! சரிடா, அவக்கிட்ட போய் சொல்லிட்டு வந்துடலாம்னு போனா, அவளைப் பார்த்தாலே பயமா இருக்கு! ம்...நான் உங்களையும், அண்ணனையும் தான் நம்பிட்டு இருக்கேன். நீங்க தான் என் வாழ்க்கையை கரை சேர்க்கணும்!" கள்ளம் கபடமின்றி அவன் உரைத்த விதம், சட்டென அவன் வார்த்தைகளைக் கவனித்துக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.