Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 04 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
Azhagin motham neeya
Pin It

தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 04 - Chillzee Story

விடிகாலையின் அழகை ரசித்துக் கொண்டே ஜாகிங் செய்துக் கொண்டிருந்தாள் சக்தி. மதியூருக்கு வந்த நாள் முதலே அவளுடைய வாழ்க்கை பாதை மாறி போய் இருந்தது. காலை நேரத்தில் ஜாகிங் செய்வது டீன் ஏஜ் முதலே சக்தி வைத்து இருக்கும் பழக்கம். இருந்தாலும் மதியூர் வருவதற்கு முன்னால் சக்தி இப்படி இயற்கையை ரசித்ததில்லை. போலீஸ் என்ற முறையில் சுற்றி இருக்கும் மனிதர்கள் மேலே கவனம், கையில் இருக்கும் கேஸ் பற்றிய யோசனை என்று எதையாவது நினைத்துக் கொண்டே ஓடுவாள்.

இப்போது வேலையை ரிசைன் செய்து இங்கே வந்த பிறகு, தோழி சத்யாவின் கீதா உபதேசத்தால் அதை எல்லாம் தாண்டி சுற்றி இருக்கும் உலகத்தையும் கவனிக்க தொடங்கி இருந்தாள்.

அவள் இன்று வந்திருந்த பகுதியின் சாலைகள் சீரமைக்க படாததால் கரடு முரடாக இருந்தது. அதனால் இந்த பக்கம் அதிக மக்கள் நடமாட்டம் எப்போதுமே இருக்காது. விடிகாலை நேரத்தில் கேட்கவே வேண்டாம்!

மற்றவர்கள் இந்த பக்கம் இந்த நேரத்தில் வர பயப்படலாம். ஆனால் சக்திக்கு பயம் என்ற ஒன்று தெரியாது என்பதால் எதைப் பற்றியும் யோசிக்காமல் வந்திருந்தாள்.

நகராட்சி அமைப்பு வளர்க்கும் சாலையோர ரோஜா செடியில், பனி மூடிய மஞ்சள் நிற ரோஜா ஒன்று அவளின் கண்ணில் பட்டது. ஒடுவதை நிறுத்தி அதன் அழகை ரசித்தாள். ரோஜாப்பூவே அழகு. பனியில் நனைந்திருந்த அந்த ரோஜாப்பூ அதிக அழகாக இருந்தது. அவளையும் அறியாமல் அதை விரலால் மெல்ல தொட்டாள்.

அடுத்த வினாடி எதுவோ ஒன்று, ரோஜா செடியின் பின்னால் இருந்த புதரில் இருந்து சக்தியை நோக்கி பாய்ந்தது. வினாடிக்கும் குறைவான நேரத்தில் சுதாரித்து, தலையையும் உடலையும் வலது பக்கமாக வளைத்தாள் சக்தி.

அவள் மேலே பாய் வந்த ‘அது’ குறி தவறி சக்தியின் பின்னால் போய் விழுந்தது.

பக்கத்தில் இருக்கும் மலை பிரதேசத்தில் இருந்த காட்டு விலங்கு ஏதாவது வதிருக்கிறதா என்ற சந்தேகத்துடன் ‘அதை’ப் பார்த்த சக்தி கடுப்பாகிப் போனாள்.

சக்தியின் கோபத்தை கண்டுக்கொள்ளாமல் ‘அது’ மீண்டும் எழுந்து நின்று ‘ர்ர்ரர்ர்ர்ர்’ என்றது.

அந்த ‘அது’ ஒரு எலக்ட்ரானிக் நாய் குட்டி போல இருந்தது! குழந்தைகளின் விளையாட்டு பொம்மையா இது?! இல்லையே, இது போல ஒன்றை அவள் முன்பே பார்த்திருக்கிறாளே. இது இங்கே எப்படி? சக்தி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

சக்தி அப்படி யோசித்துக் கொண்டு நிற்க ‘அது’ திரும்பவும் அவள் பக்கமாக வந்தது. ஆனால் அவளை தாக்க முயற்சி செய்யாமல் தாண்டிப் போய் ரோஜா செடியின் முன்னால் நின்றது.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story's Popular stories in Chillzee KiMo

  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Unnai kan thedutheUnnai kan theduthe
  • Vetri'yin SelviVetri'yin Selvi

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 04 - Chillzee StoryAdharvJo 2020-08-01 21:37
Interesting update ma'am 👏👏👏👏👏 yaru kadathingana??? Ena anadhu :Q:
Sakthi kuda SD oda track kku vara chance irukki but vinayak :no: Priyamvada direct ah sonnalum nama scientists ku puriyumandradhu doubt than 😛 theradha case pa :grin: but sakthi ethukku irrelevant aga ivaroda wedding pathi ketkuranga :Q: 😜 look forward to read next update. Thank you.
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 04 - Chillzee StoryVinoudayan 2020-07-31 22:01
Very nice and interesting epi :clap: Two days vinayak yenga irundharu :Q: yaarachum kidnap panni irupangalo :o eagerly waiting for next epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 04 - Chillzee StorySadhi 2020-07-31 21:28
Vinayak mulama semma case matum pola iruke..ss and co Ku job vanthuduchu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 04 - Chillzee Storymadhumathi9 2020-07-31 12:04
:clap: nice epi (y) :Q: yaar enna panni iruppaanga?marmamaa irukku.eagerly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top