(Reading time: 11 - 21 minutes)
Nenchil thunivirunthaal

"யாருன்னு கேட்டல்ல? நான்தான்...உங்கப்பா!" என்றார் சர்வ சாதாரணமாக! அவ்வார்த்தினையினைக் கேட்ட இருவரும் திகைத்து நின்றனர். சூழ்நிலை விளங்காமல் மாயா நிற்க, உடையானோ அதிர்ச்சியின் விளம்பில் தொடங்கி, ஆத்திரத்தின் எல்லையில் சென்று நின்றான். ஆலயம் என்றும் பாராமல் சட்டென இராகவனின் சட்டையினை அவன் பற்ற பதறிப்போனாள் மாயா.

"உதய்! நிறுத்து!" அவளது மொழிகள் அவன் செவிகளுக்கு ஏறவில்லை. அவரோ சாதாரணமாய் அவனை எதிர்கொண்டார்.

"என்ன வார்த்தை சொன்ன நீ? நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா உனக்கு?" என்று அவன் மொழிகள் எல்லைக் கடக்க, அவனது கரத்தினை தன் ஒற்றைக் கரத்தினால் அழுந்தப் பற்றியவர், துணிவோடு அவனை எதிர்கொண்டார்.

"ஏன் உனக்குத் தெரியலையா? உன் அம்மாவோட கணவன்னு அர்த்தம்! உன் அம்மா கழுத்துல இருக்குற தாலியை கட்டினவன்னு அர்த்தம்!" அம்மொழிகளை அவர் அழுந்த உரைக்க, அதிர்ந்துப் போனவனின் கரங்கள் தன்னாலே அவரை விடுவித்தன. அதிர்ச்சியின் விளம்பில் நின்றவன் வார்த்தைகளின்றி உறைந்துப் போனான்.

"என்ன...? என்ன சொல்ற நீ?" குழறின அவன் மொழிகள். கேள்வியோடு அவன் மாயாவைப் பார்க்க, அவள் கண்களோ கலங்கியிருந்தன. தன் மகனின் நிலை ஊகித்தவரின் கண்களும் கலங்கி நின்றன.

"உன் அப்பாடா நான்!" கலங்கிய விழிகளுடன் அவர் கூற, அவன் எதனை உணர்ந்தானோ, இத்தனை வருட தவத்தின் பலன் கண்ணெதிரே நிற்பதனை நன்குணர்ந்தான். நிகழ்பவைகளை செய்தவறியாது நோக்கி கொண்டிருந்தவளின் மனதில் இனம்புரியா வேதனை குடிக் கொண்டிருந்தது.

"உதய்!" என்று தந்தையார் அவனிடத்தில் தன்னை உணர்த்த முயல, அவர்தம் கரம் கூட தன்னை நெருங்காவண்ணம் விலகி நின்றான் உடையான். இத்தனை ஆண்டுகளாய் வேண்டிய வேண்டுதல் நிறைவேறிய பின்பும் அவன் செய்கை விளங்காதவர்களாய் தவித்துப் போயினர் இருவரும்! திக்கற்றுப் போய் நிலம் நோக்கியவன், எவரின் முகத்தினையும் நோக்காமல்,

"அண்ணி, கிளம்பலாம் வாங்க!" என்றான் உணர்வுகளின்றி! தன் சுயநலத்திற்காக, தன் பொறுப்பினை அவன் தியாகிக்க விழையவில்லை.

"உதய்! நான் சொல்றதை கேளு!" அவன் மனநிலை உணர்ந்தவளாய் அவனை சமாதானம்செய்ய அவள் முயல, அவனோ எதனையும் கேட்கும் நோக்கத்திலே இல்லை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.