"பாட்டி மண்டேல இருந்து நான் ஆபீஸ் போலாம்னு இருக்கேன்" ராம் சொல்ல,
"ஹ்ம்ம் சரி. செல்வி, நீயும் மண்டே அவனோட ஆபீஸ் போயிடு. ராம், எல்லா போர்ட் மெம்பெர்ஸ்க்கும் இன்போர்ம் பண்ணிடு" விசாலம் சொல்ல, சரி என தலையசைத்தவன் சாப்பிட்டு விட்டு எழ அவன் பின்னாலேயே எழுந்து சென்றாள் நித்யா.
தமிழ்செல்வியை பார்த்த விசாலம், "செல்வி, இதே இந்நேரம் உன் இடத்துல இலக்கியா இருந்திருந்தா நித்யாவை கிழிச்சு தொங்கவிட்ருப்பா" சொல்லவும், "அவங்க ஜஸ்ட் சாப்பாடு பரிமாறுனாங்க அதுக்கு எப்படி பாட்டி அப்படி எல்லாம் ரியாக்ட் பண்றது?" என்றாள் செல்வி.
"புருஷனோட விஷயத்தில எதுவுமே ஜஸ்ட் கிடையாது செல்வி. மாமியார் மேல மருமகளுக்கு கோவம் வராது கூட இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துல தான். நாளைல இருந்து பாக்கியம் வந்துருவா. நான் போன் பண்ணி சொல்லிட்டேன் இனி நீ சமையல் செய்ய சிரம பட வேண்டாம்" விசாலம் எழுந்து செல்லவும் தமிழ்செல்வி யோசனையுடன் தங்களின் அறைக்குள் நுழைந்தாள்.
தமிழ்செல்வி உள்ளே நுழையும் போது ராம் யாருடனோ போனில் பேசி கொண்டிருந்தான். அவன் பேசுவதில் இருந்து திங்கள் கிழமை போர்ட் டைரக்டர் மீட்டிங் பற்றி பேசுவது புரிந்தது தமிழுக்கு. அங்கிருந்த ஸ்டடி ரூமுக்குள் நுழைந்தவள் அங்கிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு அமர்ந்தாள். அவளுக்கு பிடித்த ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம். அதை படிக்க தொடங்கியதும் அவளுக்கு சுற்று புறமே மறந்து போகும்.
"ஓ...உனக்கு இதெல்லாம் படிக்கிற அளவுக்கு இங்கிலிஷ் தெரியுமா?" என்ற குரலில் அதுவரை ஷெர்லாக் ஹோம்ஸ் உடன் பயணித்து கொண்டிருந்தவள் அரண்டு போனாள்.
"ம்ம்ச் நீங்களா" மீண்டும் அந்த புத்தகத்தில் அவள் கவனத்தை திருப்ப, "சும்மா என் முன்னாடி சீன் போட தான இந்த புத்தகத்தை வெச்சுருக்க? இதுல இருக்கற வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியணும்னா நீ பக்கத்துலயே டிக்ஷனரி வெச்சுருக்கணும்" அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவனை நிமிர்ந்து பார்த்தாள் தமிழ்செல்வி.
"எனக்கு ஒன்னு புரியவே இல்லை. என்னை கண்டாலே உங்களுக்கு பிடிக்காது. பழிவாங்க போறேன்னு கல்யாணம் பண்ணிட்டீங்க. ஏதாவது பழி வாங்குனீங்களானா சமைக்க வெக்கறது வீடு க்ளீன் பண்ண வைக்கறது, ஏசி டெம்பெரேச்சர் ரொம்ப கம்மியா வெக்கறதுனு ரொம்ப சில்லியா பண்றீங்க. சரி நம்ம கொஞ்சம் ஒதுங்கி போலாம்னு தனியா வந்தா வாலன்டியரா வந்து இப்படி நக்கலா பேசறீங்க...உங்க இன்டேன்ஷன் தான் என்ன? என்ன பண்ண ட்ரை பண்ணறீங்க?" இப்போது தமிழின் முகத்தில் நக்கலான பாவம் இருந்தது.