(Reading time: 7 - 13 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

தொடர்கதை - வாழ்வே மாயம்! - 17 - ரவை

பெரியவருடன் சகாதேவன் பேசிக் கொண்டிருக்கையில், குழந்தையுடன் பெரியவரின் மகனும் மருமகளும் வந்து சேர்ந்தனர்.

பெரியவரின் மகன், உள்ளே நுழைந்ததுமே, தந்தையைக்கூட பார்க்காமல், சகாதேவனை தேடிவந்து, அவர் காலில் விழுந்தார்.

அவர் மனைவியும்தான்!

கண் கலங்கியிருக்க, "ஐயாதான் என் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய தெய்வம்! டாக்டர்கள் "கொஞ்சம் தாமதித்து வந்திருந்தால்கூட, குழந்தையின் உயிரை காப்பாற்றி யிருக்கமுடியாது!

ரெண்டாவது, குழந்தைக்கு வந்த காய்ச்சல், கொரோனா வகை இல்லை என்பது!

ஐயா! இவை இரண்டுக்குமே காரணம், எங்களுக்கென்னவோ, தெய்வம்போல், சமயத்துக்கு வந்து சேர்ந்த நீங்கள்தான், என்பது!

இதிலே, தெய்வசம்பந்தம் உள்ளது என்பதற்கு முக்கியமான நிரூபணம், இந்த நிமிடம் வரை, ஐயா!, நீங்கள் யார், பெயர் என்ன, எந்த ஊர் எதுவும் தெரியாமலேயே, அதையும் விட முக்கியமாக, உங்களிடம் தேவையான பணம்கூட தராமலே, உங்கள்மீது நம்பிக்கை வைத்து, எப்படி எங்களால் நிம்மதியாக குழந்தையை கவனிக்க முடிந்தது?

ஐயா! கொஞ்சம் வெளியில் போய்வந்து, பேசுகிறேன். அப்பா! உன் பேரக் குழந்தையை மீட்டுக் கொண்டுவந்துவிட்டேன், சந்தோஷமாயிரு! இதோ வருகிறேன்......" என்று வெளியே போனார்.

குழந்தை, தாத்தாவைப் பார்த்து சிரித்ததும், பெரியவர் மகிழ்ந்துபோய், ஆனந்தக் கண்ணீர் வடித்தவாறே,

"ஐயா! இந்தச் சிரிப்பை தொடர்ந்து கண்டு ரசிப்பேனா என நிச்சயமாக சொல்லமுடியாத நிலையில்தான் தவித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது, என் மடியில் தவழும் இந்தக் குழந்தையின் சிரிப்பில் நான் ஐயா! இறைவனை காணவில்லை, தங்களைத்தான் காண்கிறேன்!"

சகாதேவன் விருட்டென எழுந்து, தனது கைப்பையை எடுத்துக்கொண்டு, வெளியேற தயாரானார்.

" ஐயா! என்ன பண்றீங்க? எங்கே கிளம்பறீங்க? நாங்க ஏதாவது தப்பா பேசிட்டோமா?"

" நானும் ஆரம்பத்திலே உங்களையும் சரி, உங்கள் மகனையும் சரி, பார்க்கிறேன், என்னை கடவுளாகவே கருதி கோவில் கட்டிவிடுவீர்கள் போலிருக்கிறதே!

ஒரு மனிதன், சக மனிதனுக்கு செய்கிற சாதாரண உதவியை, எதற்காக நீங்கள் பெரிதுபடுத்துகிறீர்கள்? எனக்கு சங்கோஜமாக இருக்கிறது, தாங்க முடியலே, இது ரொம்ப

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.