(Reading time: 7 - 13 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

" பதினெட்டு வருஷ கடுங்காவல் தண்டனை!"

காதைப் பொத்திக் கொண்டனர்.

" அப்படி என்ன பெரிய குற்றம் செய்தீர்கள்?"

" ஒரு ரௌடியை பட்டப் பகலில் நடுத்தெருவில் கண்டதுண்டமாக வெட்டினேன்........"

"சிவசிவா! நம்பவே முடியலியே, நீங்களா?"

" அவன் ஒரு கன்னிப் பெண்ணிடம் வம்பு செய்து, அவளை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் அவளை பலாத்காரம் செய்தான். ஆத்திரத்தில் அந்த ரௌடியை வெட்டினேன்!"

" நல்ல காரியந்தானே! அதற்கு உங்களுக்கேன் தண்டனை?"

" போலீஸ் அந்தப் பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் வைத்து, நடந்ததை சற்று மாற்றி, என்னை குற்றவாளியாக்கி, தண்டனை வாங்கித் தந்தனர்."

" ஐயோ பாவமே! உங்களுக்கு எதிராக சதி செய்து உங்களை சிறையில் தள்ளிய இந்த சமூகத்தை பழிவாங்கத் துடிப்பதுதானே, இயல்பானது! நீங்கள் எப்படி இந்த சமூகத்திடம் மிக மிக அன்பாக நேசிக்கிறீர்கள்? உதவி செய்கிறீர்கள்? எவர்மீதும் பழி சொல்லாமல் பாசம் பொழுகிறீர்கள்?"

" சிறையில் இருந்த காலத்தில், சிந்தித்தேன்! எனக்குள்ளே பார்த்தேன், வாழ்க்கைக்கு புதிய பொருள் கண்டேன், நிம்மதிக்கு வழி கண்டுபிடித்தேன், நிகழ்காலத்தில் வாழ்கிறேன், நாமெல்லோரும் ஓர் குலம், ஓர் இனம்! இறைவனின் வாரிசுகள்! அனைவருமே ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை உணர்ந்தேன்!"

" ஐயா! நாங்கள் உங்களை தெய்வமாக தேவையின்றி உயர்த்துகிறோம் என கோபம் அடைந்தீர்களே, இப்போது நீங்கள் அதைத்தானே சொல்கிறீர்கள்?" என பெரியவர் கேட்டார்!

" ஒரே ஒரு வித்தியாசம்!நீங்கள் என்னிடத்தில் மட்டும் தெய்வாம்சத்தை பார்க்கிறீர்கள், நான் எல்லோரிடத்திலும் பார்க்கச் சொல்கிறேன்!

சரவணன்! எனக்கு ஒரு விண்ணப்பம்! உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால், உங்கள் தந்தையை நானும் தந்தையாக ஏற்று அவரை 'அப்பா'ன்னு அழைக்கலாமா? அதேபோல, தங்களை, 'தம்பீ' என்றும், தங்கள் மனைவியை

'தங்கச்சி' என்றும் அழைக்கலாமா?"

அந்தக் குடும்பம் சகாதேவனின் விண்ணப்பத்தைக் கேட்டு திகைத்து நின்றது!

மறுநாள் காலையில், சகாதேவன் தனது கைப்பையை தூக்கிக்கொண்டு விடை பெற்றுக்கொள்ள தயாரானபோது, சரவணன், தடுத்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.