(Reading time: 11 - 21 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

"ஆக..! உன் நினைப்பெல்லாம் அந்த லீவு மேலே தான் இருக்கு! என் மேலே இல்லை?" ஆலயம் என்று அவர்கள் தங்களின் செல்ல சண்டையினை நிறுத்திக் கொள்ளவில்லை.செல்பவர்கள், வருபவர்கள் யாவரும் அவர்களைத் தான் காண்கிறார்கள் என்றும் அவர்கள் கவலைக் கொள்ளவில்லை.

"இரு..இரு..! நான் வேற ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கிறேன்!" என்று வாதாடினான் அசோக்.

"போங்க! எனக்கென்ன?பையன் என்னிடமும், பொண்ணு உங்களிடமும் வளரணும்னு தான் விதி இருந்தா அதை யாரால மாற்ற முடியும்?" இயல்பாய் தொடங்கி அவள் முடிக்கையில் அவள் முகமே சிவந்துப் போயிருந்தது.அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்குமே!

"என்னோட சேர்த்து மூணு பேரையும் நீங்கத்தான் பார்த்துக்கணும் டீச்சரே!" அவளிடம் மறுப்பில்லை...புன்னகை மட்டுமே எஞ்சியிருந்தது. தத்தம் இருவருக்குள்ளும் விளைந்த அன்பானது அன்பினையும் வென்று நின்றது.

ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கியிருந்தவனை உலுக்கினார் சூர்ய நாராயணன். உறக்கத்திலிருந்து விழிப்பவனைப் போல விழித்தவனைக் கண்டவரிடத்தில் எண்ணிலடங்கா சலனங்கள்!

"என்னடா? சாப்பிடு!" அவனோ சற்றே வெறுப்புற்றவனாய் உண்ணாமல் இருந்தான்.

"ஏ...என்ன? வாங்கிக்கட்டிக்கப் போறீயா?" சற்றே இறுகிய முகத்துடனாய் வினவினார் அவர்.

"என் மேலே ரொம்ப அக்கறை காட்ட வேணாம். எனக்கு என்னைப் பார்த்துக்கத் தெரியும்!" ஜாடையாய் பேசினான் அதர்வ்.

"எனக்கு என்னப் பண்ணணும்னு நீ சொல்லாதே சரியா! நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் கேட்டு நடந்தா போதும்." பதிலடி கொடுக்க திகைத்துப் போனான் அவன்.

"நாளைக்கு என் கூட ஊருக்குக் கிளம்பி வா! அங்கே உன் அண்ணணும், அண்ணியும் வந்திருக்காங்க...உனக்குக் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்!" என்றதும் சட்டென அவனது முகம் இருண்டது. இன்று யாரை அண்ணியார் என்று குறிப்பிடுகிறாரோ, பல காலங்கள் முன்பு அவரைத் தானே தகாமல் பேசி தமையனால் தண்டிக்கப்பட்டான். வெளிறிய புதல்வனின் முகத்தினைக் கண்டும், காணாமல் உணவருந்தினார் சூர்ய நாராயணன்.

"நான் எங்கேயும் வரலை!" தடுமாறினான் இளையவன்.

"நான் உன்கிட்ட கேள்விக் கேட்கலை!" நீ செய்ய வேண்டியதை சொல்லிட்டு இருக்கேன். நாளைக்கு காலையில கிளம்புனா தான் இராத்திரிக்குள்ள போக முடியும்! இராத்திரி எங்கேயும் வெளியே சுற்றாமல் வீட்டிலே இரு!" உத்தரவுப் பிறப்பித்துவிட்டு எழுந்துச் சென்றார் அவர்.

அவர் உணராமல் இல்லை...அதர்வ் மனம் திருந்திக் கொண்டிருக்கிறான்! இத்தனைக் காலங்களாய் அவன் நெஞ்சில் விளைந்த நஞ்சானதுக் களையப்பட்டுவிட, மாற்றத்திற்கு அவனறியாமல் விடை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.