அவனையே பாவமாய் கவனித்துக் கொண்டிருந்தாள் சிவன்யா. அவன் முகத்தில் அவநம்பிக்கையே தொனித்திருந்தது.
"என்னாச்சு கலெக்ட்ரே?" ஆதவ ஔியிழந்த காரணத்தால் செந்தாமரையாளும் ஔியிழந்தாள்.
"ம்..! எனக்குத் தெரியலைம்மா! எல்லாம் பழைய நிலைக்குப் போயிடுமோன்னு தோணுது. அவன் என்கிட்ட பேசவே இல்லை!" அவளது முகம் சற்றே சங்கடத்தில் தவித்திருந்தது. ஆயிரம் இருந்தாலும் அவதியுற்றவள் அவள் அல்லவா! அவளது கரத்தினைத் தன் கரத்துள் பொதித்தவனாய்,
"நடந்ததுக்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன்மா! நான் அதர்வ் செய்ததை நியாயப்படுத்த விரும்பலை. உனக்கு இதில் விருப்பமில்லைன்னா வேணாம்! ஏன்னா, பாதிக்கப்பட்டது நீ! உன் விருப்பம் எதுவாக இருந்தாலும் அது எனக்கு சம்மதம் தான்!" வாக்களித்தான் அசோக்.
"நான் எதுவும் பொய் சொல்ல விரும்பலை கலெக்ட்ரே! அதர்வ் உங்களுடைய தம்பி! ஆனா அவன் என்கிட்ட பேசுனது தப்புத்தான். அதே சமயம், அவனை மன்னிக்கிறதுக்கு எனக்குக் கொஞ்சம் அவகாசம் தேவை அவ்வளவுத்தான்! அப்போ நானே வந்து உங்கக்கிட்ட நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்னு சொல்றேன். அதுவரைக்கும் என்கிட்ட எதையும் கேட்காதீங்க ப்ளீஸ்!" எச்சலனமும் இன்றி வெளிப்படையாகத் தன் பக்க நியாயத்தினை எடுத்துரைத்தாள் சிவன்யா. அதைக் கேட்டவனோ எவ்வித தடையும் கூறவில்லை, புன்னகையோடு சரி என்றே தலையசைத்தான். அவன் கரத்துள் பொதிந்திருந்த அவளுடைய கரம் பாதுகாப்பினை உணர்ந்தது.
"கலெக்ட்ரே..! மறந்தே போயிட்டேன். நான் போய் அந்த மீதி இருக்கிற படத்தைப் பார்த்துட்டு வரேன். கையை விடுங்க!" என்றாள் புன்னகையோடு! அவனும் தன் பங்கிற்கு சிறுப் புன்னகையினை விடுத்தவனாய், தன் கரத்தினைப் பிரித்து, அவள் கரங்களைப் பற்றி,தன் கன்னத்தோடு இணைத்துக் கொண்டது. வெப்பமான அவள் உள்ளங்கரத்தின் வெப்பத்தினை கண்கள் மூடி ஆழமாய் உணர்ந்தான் அசோக்.
"விடுங்க கலெக்ட்ரே..!" மீண்டும் அவள் நினைவூட்ட, 'இயலாது' என்றுத் தலையசைத்தவனின் கண்களில் தெரிந்த காதல் அவளது வேண்டுதலையே மறக்க வைத்தது. அவ்விரு நெஞ்சங்களும், தன்னை மறந்தன, சூழல் மறந்தன, இவ்வுலகை மறந்தன, பிரம்மாண்டத்தை மறந்தன, காலத்தையும் மறந்து தங்களையே யார் என்று மறந்து, இருவருள் ஒருவராகி ஒன்றுக் கலந்தன.
தொடரும்!
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Uyiril kalantha urave story main page
{kunena_discuss:1149}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.