தமிழ்செல்வி புன்னகையுடன்.
"ஓகே தமிழ். யு கேன் கேரி ஆன். லஞ்ச்ல மீட் பண்ணுவோம்" என்றவரிடம் சரி என தலையசைத்தவள் கீர்த்தியுடன் நடக்க, செல்லும் அவளையே பார்த்தபடி தன்னுடைய இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் "என்ன பண்ண போறா? வெறும் நர்சிங் படிச்சுட்டு... இவளுடைய வேலையையும் சேர்த்து இனி நான் பண்ண வேண்டியது இருக்கும்னு நெனைக்கிறேன்".
"மேம் இது தான் உங்க ஆஃபீஸ். நெக்ஸ்ட் ரூம் என் ரூம். உங்களுக்கு ஏதாவது வேணும்னா ஜஸ்ட் கால் பண்ணுங்க. நான் உடனே வரேன். இப்போதைக்கு உங்களுக்கு வேணும்ங்கற டீடெயில்ஸ் எல்லாம் நான் உங்க கம்ப்யூட்டர்ல காப்பி பண்ணி கொடுத்தறேன். வேற ஏதாவது வேணுமா மேம்? " கீர்த்தி கேட்கவும், "ஹ்ம்ம் ஒரு சின்ன பேவர் பண்ண முடியுமா?" என்ற தமிழ்செல்வியை பார்த்த கீர்த்தி "சொல்லுங்க மேம் கண்டிப்பா செய்றேன்" என்றாள் ஆர்வத்துடன்.
"என்னை தயவு செய்து மேம்னு கூப்பிடாதிங்க. எனக்கும் உங்களுக்கும் ஒரே வயசு தான் இருக்கும். ப்ளீஸ். ஏதோ வயசான மாதிரி இருக்கு. கால் மீ தமிழ்" என்றவளை ஆச்சர்யமாக பார்த்தாள் கீர்த்தி.
"நீங்க ஒன் ஆப் தீ டைரக்டர். நான் எப்படி பேர் சொல்லி???" தயங்கியவள் கையை பிடித்த தமிழ், "எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம ரெண்டு பெரு இருக்கும் பொது மட்டுமாவது பேர் சொல்லி கூப்பிடலாமே ??" என்றாள் தமிழ்.
"சார் உங்களை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதா எல்லாரும் பேசிக்கிட்டாங்க. சரி நம்ம ஸ்ட்ரிக்ட் சிஇஓ வையே லவ் பண்ண வெச்சது யாருனு பார்க்கற ஆர்வம் ரொம்பவே இருந்துச்சு. உங்களை பார்த்தப்பவே இவ்ளோ அழகான பொண்ணை யாருக்கு தான் லவ் பண்ண தோணாதுனு நெனைச்சேன். ஆனா நீக்க ரொம்பவே பிரெண்ட்லியா இருக்கீங்க. சாருடைய சாய்ஸ் செம்ம!!!" சொல்லி புன்னகைத்தவளுடன் சேர்ந்து சிரித்தபடி நடந்தாள் தமிழ். அவர்கள் இருவரும் பேசி சிரித்தபடி நடப்பதை பார்த்த ராம், "எப்படி இவ்ளோ சீக்கிரம் பிரென்ட் பிடிக்கிறா?" என்ற ஆச்சர்யத்துடன் பார்த்தான்.
தனது அறையில் வந்து அமர்ந்தவள் கலைவாணிக்கு அழைத்து தான் இன்று அலுவலகத்திற்கு வந்ததை தெரிவித்து விட்டு தனது கம்ப்யூட்டரில் இருந்த டாக்குமெண்ட்ஸை படிக்க தொடங்கினாள். படித்து கொண்டிருந்தவள் செல்பேசி அழைக்கவும் அதை எடுத்து பார்த்தாள்.
"ஹலோ பாட்டி" - தமிழ்செல்வி
"செல்வி, எப்படிடா இருக்கு கம்பெனி? ஒன்னும் பிரச்சனை இல்லையே?" விசாலம் கேட்க, அவரின் அக்கறையில் மனம் நெகிழ்ந்தவள் "அதெல்லாம் ஒன்னும் இல்லை பாட்டி. வந்த முதல் நாளே எனக்கு பிரென்ட் கூட கெடைச்சிட்டாங்க." என்றாள் உற்சாகமாக.
அவளின் உற்சாகத்தை உணர்ந்த விசாலம், "என் செல்வி கூட யாருக்கு தான் பிரென்ட் ஆகா