அவனின் பிடியில் அதிர்ந்து விழித்தவளின் விழிகளை கண்டவன், "நான் உன் ஹஸ்பண்ட்னு உனக்கு ஞாபகம் இருக்கா??? ஒரு வேளை மறந்துடுச்சோ" என்றவனின் கண்களை பார்த்தவளுக்கு நாக்கு உலர்ந்து வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி கொண்டது போல இருந்தது. அவளின் உடல் எல்லாம் மரத்து போனது போல இருக்க, அவளின் முகத்தையே சில நொடிகள் பார்த்தவன் அவளை தன் வசம் இழுத்து இதழோடு இதழ் பதிக்க, ஏற்கனவே மறைத்து போனதை போல இருந்த உடல் அவனின் இந்த எதிர்பாராத முத்தத்தில் துவண்டு போக அவள் கைகள் அவள் சாய்ந்திருந்த மேஜையை அழுந்த பிடிக்க, சில நொடிகளுக்கு பின் அவளை விடுவித்தவன் "இனி மறக்காதுனு நெனைக்கிறேன்" என்றவன் அப்போது தான் அவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை பார்த்தான்.
அவளின் கண்ணீர் அவனை ஏதோ செய்ய அவளின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவன் , தான் செய்த செயலாய் அப்போது தான் உணர்ந்தவன் தான் ஏன் இப்படி செய்தோம் என புரியாமல் நிற்க, அவனின் அறைக்கதவை திறந்து கொண்டு நுழைந்த நித்யாவின் பார்வையில் அணைத்தபடி நின்றிருந்த இருவரின் கோலமும் பட, அதிர்ந்து போய் நின்றாள். சிலநொடிகளில் உணர்ச்சி வரப்பெற்றவள் அவர்கள் நின்றிருந்த கோலத்தை அதற்க்கு மேல் காண முடியாமல் தன்னுடைய கையில் இருந்த பேகை கீழே போடா, அந்த சத்தத்தில் உணர்ச்சி பெற்ற ராம், அங்கு நின்றிருந்த நித்யாவை பார்த்து தமிழ்செல்வியிடம் இருந்து விலகி நிற்க, "சாரி ராங் டைமிங்ன்னு நெனைக்கிறேன்" என்றபடி உள்ளே வந்த நித்யாவின் வருகையை கூட உணராமல் நின்றிருந்த தமிழை கண்ட ராம், "தமிழ் மீட்டிங் இருக்குனு சொன்னியே...நீ உன் ரூம்க்கு போ. நான் அப்பறம் வரேன்" என அவளின் தோளில் கையை வைக்க, தலையசைத்தவள் அந்த அறையை விட்டு வெளியேற, அவள் செல்வதையே பார்த்தபடி தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தவனுக்கு அதற்க்கு பின் நித்யா பேசியது எதுவும் காதில் விழவில்லை. அவள் ஏன் அழுதாள்??? என்ற கேள்வியே அவனின் மனதில் ஓடி கொண்டிருந்தது. தன்னை அவள் அந்த அளவுக்கு வெறுக்கிறாளா என்று எண்ணியவனுக்கு உன்னை வெறுப்பதால் பழிவாங்க தான் திருமணம் செய்து கொண்டேன் என்று அவளிடம் சொன்னது மறந்து போயிருந்தது.
தொடரும்
Next episode will be published on 22nd Aug. This series is updated weekly on Saturday mornings.
Go to Priyamaanavale story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.