(Reading time: 11 - 22 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தன்னுடைய மேஜையில் இருந்த தொலைபேசி அழைப்பதை உணர்ந்தவள் அதை எடுத்து காதில் வைத்தாள்.

"கம் டு மை ரூம்" என்ற செய்தியுடன் அழைப்பு துண்டிக்கபட, ராம் என்பதை உணர்ந்தவள் "கம் டு மை ரூம்" என அவனை போலவே சொல்லி பழிப்பு காட்டியவள் எழுந்து அவனது அறைக்கு சென்றாள். அவள் அவனுடைய அறைக்குள் நுழையும் போது கையில் இருந்த ரிமோட்டால் அந்த அறையின் கர்ட்டெயினை திறந்து மூடி கொண்டிருந்தான். அவன் முகம் இறுகி இருந்தது. உள்ளே நுழைந்தவள் அவனுக்கு எதிரே சென்று நின்றாள்.

"எதுக்கு வர சொன்னிங்க?" என்றவளை நிமிர்ந்து பார்த்தவன் முகத்தில் இருந்த கோபத்தை கண்டவள், "இத்தனை நேரம் நல்லா தான இருந்தாரு...என்னாச்சு???" என்ற யோசனையுடன் அவனை பார்த்தாள்.

"ஆபீஸ் விசிட் எல்லாம் முடிச்சாச்சா?" அவன் குரல் அந்த உணர்ச்சியும் இல்லாமல் ஒலித்தது.

"ஹான் கீர்த்தி காட்டுனாங்க. அவங்க டாக்குமெண்ட்ஸ் ஷேர் பண்ணிருக்காங்க. அதை படிச்சுட்டு இருக்கேன்" என்றவளை மீண்டும் அதே பார்வை பார்த்தான்.அவனின் பார்வை அவளுக்கு புரியவில்லை என்றாலும் அவனின் பார்வையில் அவளின் நெஞ்சில் குளிர் பரவியது. தான் ஏதாவது தவறாக செய்து விட்டோமா என புரியாமல் அவனை பார்த்தாள்.

"ஹ்ம்ம் டாக்குமெண்ட்ஸ் படிச்சிட்டு இருக்க!!!! குட்... எவ்ளோ டாக்குமெண்ட்ஸ் கம்ப்ளீட் பண்ணிருக்க???" என்றவனை வினோதமாக பார்த்தாள் தமிழ்செல்வி. "இவருக்கு என்னாச்சு? ஏதோ மேத்ஸ் டீச்சர் ஹோம்ஒர்க் முடிச்சிட்டியானு கேக்கற மாதிரி சர்வ சாதாரணமா கேக்கறாரு?" என அவனை பார்த்து விழிக்க, "இப்படி பார்த்தா என்ன அர்த்தம்??? நீ ஒன்னும் சாதாரண கேர் டெக்கர் இல்ல. யு ஆர் எ டைரக்டர். இங்க உக்காந்து அரட்டை அடிக்க வரல நீ. யு ஷுட் பீ மோர் ரெஸ்பான்சிபிள்" என்றவனை பார்த்த தமிழ், கீர்த்தியுடன் பேசியதை தான் சொல்கிறான் போல என்று எண்ணியவளுக்கு கோவம் வந்தது.

"நான் ஆபீஸ்க்கு வந்து மூணு மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள எவ்ளோ டாக்குமெண்ட்ஸ் முடிச்சிருக்கனு கேக்கறீங்க. பேசி சிரிக்க கூட கூடாதா இந்த கம்பெனில??? அதான் இங்க ஒர்க் பண்றவங்க எல்லாம் ஒரு எனெர்ஜியே இல்லாம இருக்காங்க" என்றவள் கோபத்தில் கத்த, அவளின் முகத்தில் வெடித்து கொண்டிருந்த கோபத்தை பார்த்தவன் எழுந்து அவளருகே வந்தான்.

"என்கிட்டே மட்டும் தான் இந்த கோப முகம் போல...உன் "பிரெண்ட்ஸ்" கிட்ட எல்லாம் சிரிச்சு சிரிச்சு பேசற???" அவனின் அருகாமையில் மூச்சு முட்ட, பின்னால் நகர்ந்தவளை இடித்தது அங்கிருந்த மேஜை. அதில் இடித்து கொண்டு நின்றவள் "யார்கிட்ட கோவ படணும் யாருகிட்ட சிரிக்கணும்ங்கறது என் இஷ்டம். அதை கேக்க நீங்க யாரு???" என்றவளின் பதிலில் ராமின் கோபம் அதிகமானது. அவளின் அருகே நெருங்கி நின்றவன் காய் அவளின் கன்னத்தை அழுந்த பிடித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.