ஆதவனானவன் சாதாரண நிலைக்காட்டிலும் சற்றே ஆவேசமாகவே தனது அருளினைப் பாரில் பொழிந்துக் கொண்டுத் தான் இருந்தான். ஏனோ அவனுக்கு மட்டும் அது பனிக்காலமாய் இருந்திருக்கலாம்! தலையில் முல் கால்வரை முக்காடிட்டு நடுங்கிக் கொண்டிருந்தவனைக் கண்டு நிச்சயம் அச்சமானதுத் தர்மாவின் மனதில் தொற்றிக் கொள்ளத் தான் செய்தது.
"என்னடா? என்னடா பண்ணுது? ஏன்டா இப்படி உடம்பெல்லாம் நடுங்குது?" கலக்கத்தில் கண்ணீரே வந்துவிடும் போலிருந்தது தாயிற்கு!
"ஆதி என்னடா ஆச்சு இவனுக்கு?" மூத்தவனைக் கேட்க, அவனும் குழம்பிய வண்ணமே அவனது இதயத்துடிப்பினை சோதித்துக் கொண்டிருந்தான். இதயத்துடிப்பு வழக்கத்தினை மறந்து சற்றே தன் விருப்பத்திற்குத் துடிக்க திடீரென்ற சீரற்ற அந்நிலை அவனுக்கு எங்ஙனம் வந்தது என்ற குழப்பம் அவனுடையது!
"எப்படிடா திடீர்னு இப்படி ஆச்சு? ஒரு மணி நேரம் முன்னாடிக் கூட நல்லாத் தானே இருந்த?" கேட்டே விட்டான் அவன். அவன் வினாவின் தர்மாவின் முகம் வெளிறிப் போனது.
"மாயாவை கூப்பிடு! மாயா கூட தானே இருந்தா?" தாயார் வினவ,
"மாயா!" என்று குரல் தந்தான் ஆதித்யா. அவளோ உடையானின் அந்நிலைக் குறித்த எக்கவலையும் கொள்வதாகவே இல்லை. பொங்கிய சிரலப்பினையே கட்டுப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தாள் அவள். அதனை தர்மா கவனிக்கவில்லை அவளனவன் கவனித்துக் கொண்டிருந்தான்.
"என்னம்மா ஆச்சு? ஏன்மா இவன் இப்படி இருக்கான்?" உடையானோ பரிதாபமாய் ஓர் பார்வை அவளை நோக்க அவளோ எழுந்த சிரிப்பினை அடக்கியவளாய்,
"எனக்குத் தெரியலை அத்தை! என் கூட இருந்தவரைக்கும் நல்லாத்தான் இருந்தான். திடீர்னு என்னாச்சு உதய்?" இருவரது திருட்டுமுழியையும் ஆதித்யா நம்புவதாகவே இல்லை.
"மா! ஒண்ணுமில்லை...இன்ஜெக்ஷன் போடுறேன்மா! தூங்கி எழுந்தான்னா சரியாகிடும்! நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்." எவ்வளவு ஆறுதல் செய்தும் தாய் மனம் புதல்வனிடமே நிலைத்திருந்தது.
"நடுராத்திரி வெளியே போய் சுற்றாதேன்னு சொன்னேனே கேட்டியா?இப்போ பாரு..எது கண்ணுப்பட்டதோ!" வழக்கமான தாய் பாடலை அவர் பாட, மீண்டும் சந்தேகமாய் மாயாவினை நோக்கினாற் ஆதித்யா. என்னமோ நிகழ்ந்திருக்கிறது!
"ஒண்ணுமில்லைம்மா! இராத்திரிக்குள்ளே சரியாகிவிடுவான். நீ போங்க!" சமாதானம் செய்து அனுப்பி வைத்தான் அவன். எஞ்சி இருந்த இருவரையும் முறைத்த வண்ணம் ஊசியில் அவன் மருந்தேற்ற முயல,
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Varun theevirama irukane