(Reading time: 13 - 25 minutes)
Nenchil thunivirunthaal

எடுக்க, அவனோ எதனைக் குறித்தும் மதியாதவனாய் மாடியிலிருந்து கீழிறங்கிச் சென்றான்.

"என்ன அவளைக் கட்டிக்கப் போற மாதிரி பேசுற?" என்ற வார்த்தைகள் மீண்டும் அவன் நினைவில் எட்ட, ஒரு சிறிய புன்னகை அவனிடத்திலிருந்து வெளியானது.

"பின் என்ன? அவளை வேற்றொருத்தியாய் வைத்திருக்கவா அவளிடத்தில் அவ்வளவு நெருக்கம் பாராட்டுகிறேன்!" என்று எண்ணிய மனதிற்கு பெருமூச்சு விடுத்து சாந்தப்படுத்தினான் வருண்.

"அவளை என்னிடத்திலிருந்துப் பறிக்க எவரால் இயலும்?அவளை மணக்க என்னவாகிடினும் செய்ய துணிவேன்." என்ற கர்வப் புன்னகை அவனிடத்தில் துளிர்விட்டது. இப்படியும் காதல் உண்டோ? கடுமையினை திணித்து? அவன் இறங்கி வர, அகிலாண்டேஷ்வரிக்கு மருந்தினைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் கங்கா. அதனை வாங்கி ஆனந்தத்துடன் உட்கொண்டவர், அவளது புஜத்திலானக் காயத்தினைக் கவனித்தார்.

"என்னது அது? இப்படி கண்ணிப் போயிருக்கு!" என்ற வினா அவளைத் திடுக்கிட வைக்க, வருணின் கூர்மையானப் பார்வை அவளைத் துளைத்தெடுத்தது. தன் பங்கிற்குக் கவனத்தினை அவள் புஜத்தினில் பதிக்க, ஏனோ அவனுள் பலவேறு வினாக்கள் எழும்பின.

"அது பாட்டி நான் தெரியாமல் கதவில் மோதிக்கிட்டேன்." என்றுப் பொய் புகல்ந்தாள் கன்னிகை.

"என்னப் பொண்ணோ! கவனத்தை எங்கே தான் வைத்திருப்பியோ! பேசாமல் உனக்கும் ஒரு கண்ணாடியை வாங்கி மாட்டிவிடுறேன்." என்றுப் புலம்பியவண்ணம் அவர் எழுந்துச் செல்ல பெருமூச்சானது வெளியானது அவளிடத்திலிருந்து! அதனையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. சமாளித்துவிட்டோம் என்றுத் திரும்பியவளின் எதிரில் உக்கிரமாய் நின்றிருந்தான் வருண். அவளருகே அவன் நெருங்க, உச்சி முதல் பாதம் வரை வியர்த்துக் கொட்டியது கங்காவிற்கு! கூர்மையானப் பார்வைக் கொண்டு அவள் விழிகளுக்குள் ஊடுருவியன்,

"எந்தக் கதவு?" என்று வினவ, நடுநடுங்கிய தேகத்தினோடு கண்ணீரும் கொண்டவளாய்,

"அந்தக் கதவு!" என்று சமையலறைக்கும், அதன் உள்ளறைக்கும் நடுவிலானக் கதவினை சுட்ட, அதனைக் கவனித்துவிட்டு,

"மருந்துப் போடு!" என்று அழுந்த உரைத்துவிட்டு விலகிச் சென்றான் அவன். அவன் விலகியப் பின்னரே இழுத்துப் பிடித்த சுவாசக் காற்றினை வெளிவிட்டாள் கங்கா. இன்னும் எத்தனைக் காலம் தான் இத்தனைத் தண்டனைகளோ என்று எண்ணிய எண்ணுத்துள், சிறிதும் சம்பந்தமே இன்றி உட்புகுந்தன காலையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் நினைவுகள்! சட்டென

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.