(Reading time: 13 - 25 minutes)
Nenchil thunivirunthaal

உறைய வைத்தது அவனுக்கு! அச்சத்தில் கிலியோடு அவனை நோக்கிக் கொண்டிருந்தவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவன். பதறியவண்ணம்,அங்கிருந்து பெண்ணானவள் ஓடிவிட, அவனிடத்திலானப் பதற்றம் அவனை ஆட்கொண்டது!

தனிமையில் நிகழ்ந்தவற்றை சிந்தித்த தருணம், எதற்காகத் தான் வையகமே தனக்கு எதிராக செயல்படுகிறதோ என்ற எண்ணம் அவனுக்குள் முளைக்கவே செய்தது. நிச்சயம் அவள் மனம் அனைத்தையும் விபரீதமாக சிந்தித்திருக்கலாம். அனைத்தையும் கடந்து எவ்வித உரிமையும் இன்றி நிலைநாட்டப்பட்ட அவ்வுரிமைக் கண்டு சற்றே அவனுள்ளும் எண்ண அலைகள் பெருக்கெடுக்கவே செய்தன. இவன் நிலை இப்படியென்றால் அவளோ அச்சத்தின் உச்சத்திற்கே சென்றிருந்தாள். அவளது தேகமெல்லாம் நடுங்கியிருக்க, அனைத்தையும் கடந்து ஏனோ தனது செவ்விதழ்களைத் தன்னையே உணராமல் தீண்டிப் பார்த்தவளின் முகத்தில் நாணமும் பொதியத் தான் செய்திருந்தது.

"மா! என்னம்மா உனக்குப் பிரச்சனை? மாமா அத்தை ஒண்ணு சேரக் கூடாதுன்னு நினைக்கிறீயா?" என்ற மகனை எரித்துவிடுவது போல பார்த்தார் தேவி.

"ஏன்டா சேரணும்? எதுக்கு சேரணும்? அந்தத் தர்மா என்னை எவ்வளவு அவமானப்படுத்தி இருப்பா! ஒருவேளை அவ புள்ளைங்க இங்கே வந்து உரிமையை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டால் அப்பறம் அப்பறம் நம்ம கொட்டம் அடங்கிவிடும். அதுவும் இல்லாமல், ஒரு வேலைக்காரிக்குப் பிறந்தவனைப் போய்..ச்சீ..ச்சீ..." முகம் சுழித்த தாயினைக் கண்டு ஏனோ பற்றிக் கொண்டது வந்தது அவனுக்கு!

"அது அவன் தப்பில்லையேம்மா! என்னமோ நீதான் அசிங்கமா பண்ற!" என்று வெறுப்புற்றான் வருண்.

"பேசுவடா! ஏன் பேச மாட்ட? நீயே இந்த வீட்டில் இருக்குற வேலைக்காரி பின்னாடி தானே சுற்றிக்கிட்டு இருக்க!" என்றதும் தலைக்கேறியது கோபமானது!

"கங்காவைப் பற்றி தப்பா பேசாதேம்மா!" அவளிடம் வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் அவளை அவமதிக்க துணிந்தவன், தாயிடத்தில் அவளை விட்டுக் கொடுக்காமல் பேசியது அவருக்கே அதிர்ச்சியாய் விளைந்தது.

"என்னடா? அவளுக்குப் பரிந்து பேசுற? என்ன அவத்தான் உன்னை கட்டிக்கப் போறாளா என்ன?" என்றதும் ஏதோ ஓர் காரணத்துக்காக வெளிறிப் போனது அவன் முகம்!

"தேவையில்லாமல் பேசாதேம்மா! என்னமோ பண்ணு, என்னை ஆளைவிடு!" என்று ஒரே கும்பிடாய் கும்பிட்டு எழுந்தான் வருண்.

"பாருடா! இந்தத் தேவி என்ன செய்யப் போறான்னு மட்டும் வேடிக்கைப் பாரு!" என்று சபதம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.