(Reading time: 13 - 25 minutes)
Nenchil thunivirunthaal

"ஆதி வேணாம்!" என்று அவனது கரம் பற்றி தடுத்தாள் மாயா. அவளது செய்கையின் தாத்பரியம் விளங்காதவனிடத்தில் ஆயிரமாயிரம் வினாக்கள்!

"நீங்க வாங்க! அவன் சரியாகிவிடுவான்!" உடையானின் பார்வையோ கிலியில் விரிய, சட்டென போர்வையில் தன்னை முழுதும் மூடியவனாய் அப்படியே அமர்ந்தவண்ணமே கவிழ்ந்துக் கொண்டான் அவன். அதனைக் கண்டு வாய்விட்டு சிரித்தவளாய் தனிமையை அவனுக்கு நல்கியவள், ஆதியை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

எப்பணியிலும் முழு ஈடுபாடின்றி தன்னைத் தனிமைப்படுத்தியிருந்தாள் கங்கா. அச்சத்தில் அவள் தேகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. நிகழ்ந்தவையெல்லாம் கனவாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் அது கனவல்ல என்று சாதித்தது அவளது புஜத்தில் ஆழமாய் பதிந்திருந்த கைத்தடம்! மனதின் படபடப்பு ஓர் எல்லையினைக் கடந்து அவளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. ஏன் இவ்வாறு எல்லாம் நிகழ வேண்டும் என்ற வினா மட்டும் அவளுடையதாய்!

சில மணித்துணிகள் முன்பு....

"உதய்! எத்தனைப் பேர் சொல்றோம்? கொஞ்சமாவது கேளேன்! இப்போ இதெல்லாம் தெரியாமல் இருந்தால் இப்படித்தான் இருப்பியா? எங்களுடைய பழைய உடையானை நாங்க ரொம்ப மிஸ் பண்றோம்!" தன் பங்கிற்கு அவனை சமாதானம் செய்ய முயன்றிருந்தாள் மாயா.

"சரி...ஆதிக்கிட்ட கங்கா வேணாம்னு சொன்னியாமே! ஏன்?" அவனோ பரிதாபமாக தன் முகத்தினை வைத்திருந்தான்.

"உண்மையெல்லாம் தெரிந்தால்..அவத்தான் என்னை வேணாம்னு சொல்லுவா! வேணாம் அண்ணி, நான் இப்படியே இருந்திடுறேன். ஏன் என்னை உங்க பையன் மாதிரி பார்த்துக்க மாட்டீங்களா?" சிறுப் பிள்ளையாய் அவன் வினவ, அவளுள் இருந்த தாய்மை எட்டிப் பார்த்தது.

"அட! நான் தான் அன்னிக்கே சொன்னேனே! எனக்கும் அவருக்கும் நீ தான் முதல் குழந்தை உதய்! ஆனா, உன்னை இப்படி பார்க்க நாங்க ஆசைப்படலை. உனக்குக் கஷ்டமாக இருந்தா கங்காவிடமே எல்லாத்தையும் சொல்லிவிடு! அவளுக்குப் பிடித்தால் கல்யாணம் பண்ணிக்கோ!" விடை நல்கியவளை ஏற்காமல் பார்த்தான் அவன்.

"என்ன அண்ணி! நீங்களும் புரிந்துக்க மாட்றீங்க? இந்த ஊரில் அம்மாக்கு ஒரு மரியாதை இருக்கு.....அவருக்கும்...மரியாதை இருக்கு..! அவங்களுக்கு பயந்தே அவ சம்மதித்துவிடுவாள். அதெல்லாம் வேணாம் அண்ணி! நான் சென்னைக்கே கிளம்புறேன். இரண்டு புராஜெக்ட் புக் ஆக போகுது! ரவி எல்லாம் போன் மேலே போன் போட்டுட்டு இருக்கான்!" சமாளிக்க முயன்றான் அவன். அவனது மனம் மாற எவ்வளவோ முயன்றவள் வெறுப்புற்றவளாய் மௌனமாகிப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.