(Reading time: 11 - 22 minutes)
Priyamaanavale
Priyamaanavale

பிடிக்காது..." எனவும் "பாட்டி என்ன ஐஸ் வெக்கறீங்க???" என சிரித்தாள் தமிழ்செல்வி.

"சே சே என் பேத்தி அழகானவ, புத்திசாலி. அப்போ பாட்டிக்கு பெருமையா இருக்காதா" என்றவர் இடையில் இரும, "என்ன பாட்டி பார்த்திங்களா? அவ்ளோ காலைல ஊருல இருந்து ட்ராவல் பண்ணி இப்போ கோல்டு வந்துருச்சு" என்றவள் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்த விசாலம், அதெல்லாம் ஒன்னும் இல்லடா சரி நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல. நீ வேலையை பாரு" என்றவர் அழைப்பை துண்டித்தார்.

அவளின் அறை வாசலில் நின்று அவள் பேசுவதை பார்த்து கொண்டிருந்த ராம், "என்கிட்டே பேசும் பொது மட்டும் ஆங்கிரி பேர்ட் மாதிரி முறைக்கிறா. மத்தவங்ககிட்ட பேசும் பொது வாய் மட்டுமா சிரிக்குது...கண்ணு காது மூக்கு எல்லாம் சிரிக்கிதே" உள்ளுக்குள் கொஞ்சம் பொறாமை புகைய, உள்ளே நுழைய எண்ணியவனை தடுத்தது அவளது "ஹலோ அசோக்" என்ற அடுத்த அழைப்பு.

"இதுவரை தான் பாட்டியுடன் இருந்து பார்த்து கொண்டோம். இனி பாட்டி வீட்டில் ஒழுங்காக மருந்தெல்லாம் சாப்பிடுகிறாரோ இல்லையோ" என்ற கவலை கொண்டவள், "அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணனும்...அதுக்கு முன்னாடி பாட்டியுடைய கோல்டு சரியாகணும்" என்று எண்ணியவள், தன்னுடைய செல்பேசியில் அசோக்கை அழைத்தாள்.

"ஹலோ அசோக்..." தமிழ்செல்வியின் குரலை கேட்ட அசோக், "ஹலோ தமிழ், என்னை மறந்துட்டு பார்த்தியா?? இது தான் ஒரு பிரென்ட் இன்னொரு பிரெண்டுக்கு கொடுக்கற மரியாதையா? இப்போ தான் எனக்கு கால் பண்ணனும்னு தோணுச்சா???" எனவும், "அடடா...சாருக்கு கோவம் வந்துருச்சோ...பாவம் சார்கிட்ட போனே இல்லை...நான் தான் கால் பண்ணி பேசணும் போல...." என தமிழ் சொல்ல, "ஹிஹிஹி" என அசோக் அசடு வழிய, "அய்யே அசடு வழியாதிங்க, இங்க வரைக்கும் தெறிக்குது" என்றாள் தமிழ்செல்வி சிரிப்புடன். அவள் முகத்தில் இருந்த சிரிப்பை கண்ட ராமின் முகம் கோபத்தில் சிவக்க, அதே கோபத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

"அசோக், நான் இன்னைக்கு தான் கம்பெனில ஜாயின் பண்ணிருக்கேன். பாட்டி ஊருல இருந்து வந்துட்டாங்க. அவங்களுக்கு இந்த கிளைமேட் செஞ் ஒத்துக்கலைனு நெனைக்கிறேன். கொஞ்சம் கோல்டா இருக்கு. நீங்க கொஞ்சம் இன்னைக்கு போயி பாட்டியை பார்க்க முடியுமா?" தமிழ்செல்வி கேட்கவும், "நிச்சயம் தமிழ். எனக்கு ஈவினிங் கொஞ்சம் அப்பாய்ன்மெண்ட்ஸ் இருக்கு. நான் ஒரு செவென்க்கு வரேன்" என அசோக் சொல்லவும், "சரி அசோக், நானும் இன்னைக்கு சீக்கிரம் வந்துறேன். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றவள் அதற்க்கு பின் சில நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள். பாட்டிக்கு புதிய கேர் டெக்கர் ஏற்பாடு செய்வதை பற்றி அவனிடம் நேரில் பேசிக்கொள்ளலாம் என்றெண்ணினாள்.

கம்ப்யூட்டரில் கவனத்தை செலுத்தியவளை மறுபடியும் அழைத்தது அடுத்த தொலைபேசி அழைப்பு.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.