(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 12 - ஆர்த்தி N

maraveno ninnai

ந்த பி.எம்.டபில்யூ கார் காற்றின் வேகத்திற்கு ஏற்ப ஈசிஆர் சாலையில் ரிஷியின் கைவண்ணத்தில் பறந்துக் கொண்டிருந்தது. அவன் முகத்திலிருந்த கடுமை நன்கு எடுத்துரைத்தது அவனது மனநிலையை. இன்று அவனிடம் மாட்டப்போவரின் நிலை கவலைக்கிடம் தான் என்பதற்கு தகுந்தவாரு ஓ.எம்.ஆரிலுள்ள அவனது அலுவலகத்தினுள் வேகமாக கார் நுழைய. அங்கிருந்த செக்யூரிட்டியிடம் தனது கார் சாவியை தந்து பார்க் செய்ய சொல்லிவிட்டு விரைவாக உள் சென்றவன் எதிரில் வந்தவர்களின் சிரிப்பைக் கூட ஏற்காமல் தனது அறை நோக்கி சென்றான்.

அவனது பணியாளர்களுக்கு நன்குப் புரிந்தது இன்று தங்களது சீ.இ.ஓ யாரையோ கடித்துக் குதறிவிடும் எண்ணத்தோடு வந்துள்ளார் என தங்களுக்குள் முனுமுனுத்துவிட்டு தத்தமது வேலைகளைப் பார்க்க நகர்ந்தனர்.

தனது அறையினுள் நுழைந்த ரிஷி தனது லேப்டாப்பை ஓபன் செய்து அவனுக்கு காலையிலிருந்து வந்த மெயில்களுக்கு படப்படவென ரிப்ளை டைப் செய்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனது அறையை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த மனிதர் அவன் முன் நின்று பயத்தில் எச்சில் விழுங்கினார். மனதுக்குள் ‘எவனோ செஞ்சதுக்கு இப்போ என்ன வெச்சு செய்யப் போறார்.. கடவுளே நீ தான் என்ன காப்பத்தனும்’ என ஒரு அவசரக் கோரிக்கையை முன் வைத்தார்.

தன் மடிக் கணினியிலிருந்து தலையை நிமிர்த்தியவன் கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு கண்களில் கூர்மையுடன் உற்று நோக்கினான். அந்தப் பார்வையே எதிராளியின் முகத்தில் அச்சத்தை விளைவித்தது. “ரிஷி அது வந்து அந்த பையன் தெரியாம பண்ணிட்டேன்னு சொல்லறான்.. இன்னைக்கு அவனுக்கு லாஸ்ட் டே.. சோ ரெஃபரெண்ஸ்கு பண்ணேன்னு சொல்லறான்..” என மென்று முழுங்க..

“ஹௌ குட் யூ கைஸ் பி சோ இர்ரெஸ்பான்ஸிபில் ராஜேஷ்? ஈசியா வந்து சொல்லுறீங்க.. நம்ம கம்பணிய ஸ்யூ(sue) பண்ணீயிருப்பாங்க. நல்ல வேளை அந்த க்லைன்ட்ஸ் ஜஸ்ட் வார்னிங்க் ஓட விட்டாங்க” என ரிஷி பொறிய.. நிலைமை புரிந்ததால் அந்த ராஜேஷ் எனப் பட்ட மனிதரும் மௌனம் காத்தார்.

விஷயம் என்னவென்றால் எந்தவொரு தொழிலாக இருந்தாலும் confidentiality என்பது மிக முக்கியம். ஐடி நிறுவங்களிலும் அதுவே. அவர்களது கோட் செட்அப்பை எந்த ஒரு பொது தளங்களிலும் பதிவு செய்யக் கூடாது. ஆனால் ராஜேஷின் டீமில் உள்ள ஒரு பையன் இது தெரியாமல் தனது சொந்த உபயோகத்திற்காக வைத்திருந்த கிட்ஹப்(github) என்னும் தளத்தில் ஏற்றிக்கொண்டான். அதற்குள் ராஜேஷ் அவனது செயலை கணித்து உடனே அதிலிருந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.