(Reading time: 9 - 18 minutes)

நீக்கிவிட்டார் தான்.. இருந்தும் க்ளைன்ட்டிற்கு இவர்களிடமிருந்து கோட் ப்ரீச் ஆனது தெரிந்துவிட்டது. பல சமயங்களில் இவ்வாறு நடக்கும் பட்ச்சத்தில் இதற்கு பொறுப்பான கம்பனியை இழுத்து மூட வேண்டிய நிலைமையும் வரலாம். ஆனால் இவர்களது நல்ல நேரம் ஒரு வார்னிங்க் ஓடப் போனது.

“ஐ’ம் அக்கௌன்டபில் ஃபார் திஸ் ரிஷி. எல்லா டீம் மேட்ஸ் கிட்ட கோட் டெஸ்ட்ராய் பண்ண் சொல்லிட்டேன்.. இனி நா மட்டும் தான் ஹேண்டில் பண்ணுவேன் ரிஷி..” என அவர் தன் பக்க விளக்கத்தை அளிக்க

அவரது பதிலில் இன்னும் கடுப்பான ரிஷி சில பல மண்டகபடி நடத்தி அந்த மனிதரை ஒரு வழியாக “ஜஸ்ட் கோ.. ரீசன்ஸ் சொல்லாம..” என அதிருப்தியுடன் அனுப்பினான்.. பாவம் அந்த மனிதரும் புலம்பிக் கொண்டே போனார். ரிஷி அவசியமில்லாமல் கோவப்படமாட்டான்.. ஆனால் அவனால் இவ்வாறான தவறுகளை ஏனோ ஏற்றுக்கொள்ளவே முடியாது.. பின் அந்த பிரச்சனை அவ்வளவு பெரிது ஆகாததால் பரவாயில்லை இல்லையெனில் .. அவனுக்கு மனம் ஆறவே இல்லை.. அவனுடைய இத்தனை வருட உழைப்பு நொடியில் தரமட்டம் ஆகியிருக்கும்.. மற்றப் பணி இருந்ததால் இதைப் புறம் ஒதுக்கி அதை கவனிக்க ஆரம்பித்தான்.. அவன் இரு வரங்களில் யு.எஸ்’இல் நடக்கும் டெக் கான்ஃபரென்சிற்கு செல்ல வேண்டியிருந்தது.. எப்பொழுதும் இதுப் போல செல்வது வேந்தனாக தான் இருப்பான்.. ஆனால் அவர்களின் புது கிளைகளைக் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருந்ததால் வேந்தன் மற்றும் வினய் அதைப் பார்த்து கொண்டிருந்தனர்.

மேஜையிலிருந்த அவனது கைப்பேசி சினுங்க.. புது நம்பரென அதில் தெரிய யோசனையுடன் அதை ஏற்றான்.. “ஹெல்லோ, ரிஷி ஹியர்..”

“ஹெல்லோ ரிஷி சார், நான் xxxxxxx ஸ்கூல் ப்ரின்சிபால் பேசறேன்.. உங்களுக்கு முன்னாடியே கூப்பிட்டு பேசியிருக்கனும் நீங்க எங்க டீச்ச்ர்ஸ் கிட்ட சொன்ன அப்புறம்.. நீங்க கொட்டேஷன் கேட்டு இருந்தீங்க இல்லையா.. நீங்க ஃப்ரீயா இருக்கற டைம் நம்ம ஒரு டிஸ்கஷன் வெச்சுகலாமானு கேட்க தான் கால் பண்ணேன் சார்..” என இவன் பதில் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் அவரே பேசிக் கொண்டிருக்க..

ரிஷிக்கும் அப்பொழுது தான் அது நியாபகம் வந்தது. வேலைப் பழுகளில் மறந்துப் போயிருந்தான். அவனுக்கு இருக்கும் பிசி ஸ்கெட்யுலில் இப்பொழுது எங்கும் நகர முடியாதுதான்.. இருந்தும் உள்ளுக்குள் குதூகலித்துக் கொண்டே “ஓ ஓகே பரவாயில்லை மேம்.. நான் இப்போ கொஞ்சம் ஃப்ரீ தான் நானே உங்க ஸ்கூலுக்கு ஒரு அரை மணி நேரத்துல வரேன்.. வந்து பேசிக்கலாம்” என உறைத்தான். அவன் நினைத்தால் நேரில் போய் தான் இதை முடிக்கனுமென்று இல்லை, இருந்தும் அவனின் அவளை நேரில் பார்க்க ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.