(Reading time: 9 - 18 minutes)

வாய்ப்பு கிடைப்பதை அவன் தவறவிட நினைக்கவில்லை. மடமடவென அவனுக்கு இருந்த மீட்டிங்க்ஸ் எல்லாம் ஒரு இரண்டு மணி நேரம் தள்ளி வைக்க மெயில் போட்டுவிட்டு சுறுசுறுப்புடன் கிளம்பினான். கையில் கார் சாவியை சுழற்றிக்கொண்டு துள்ளல் நடையுடன் செல்லும் ரிஷியை குழப்பத்துடன் பார்த்தாள் ரிசப்ஷனில் இருக்கும் பெண். ‘காலையில கடுகடுனு வந்தாரு.. இப்போ 1000 வாட்ஸ் பல்ப் மாதிரி பளிச்சுனு போறாரு. என்னமோ’ என அப்பட்டமாக அவனது எக்சைட்மென்ட் வெளியே தெரியும் அளவிற்கு இருந்தது அவனது செயல்.

அரை மணி நேரம் எடுக்கும் பயணம், இருபது நிமிடங்களில் அப்பள்ளியை அடைந்திருந்தான். காரை மர நிழலின் கீழ் பார்க் செய்துவிட்டு அங்கு இருந்த வாட்ச்மேனிடம் ப்ரின்சிபாலின் அறையை விசாரித்து சென்றான்..

“எக்ஸ்க்யூஸ் மி மேம்..” என அனுமதி வாங்கி உள் சென்றவன்.. “ஐ அம் ரிஷி வந்தியத், சி.ஈ.ஓ ஆஃப் ஹை-டெக் .டி நெட்வெர்க்” என முறையாக அறிமுகமாக.

“ஹெல்லோ சார்.. வாங்க வாங்க.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்.. நீங்க வர அரை மணி நேரம் ஆகும் சொன்னதால் இப்போ தான் கேட் கிட்ட வர எந்திரிச்சேன் உங்கள ரிசீவ் பண்ண.. “ என அவர் மிகவும் மரியாதையுடன் உறைக்க..

“பரவாயில்லை மேம் எதுக்கு இவ்ளோ ஃபார்மாலிட்டி.. ரிலாக்ஸ்.. ட்ராஃபிக் ரொம்ப இல்லை அதான் சீக்கிரம் வந்துட்ட்டேன்.. நீங்க ஏதோ டிஸ்கஸ் பண்ணனும் சொன்னிங்கல்ல.. நம்ம அது பார்க்கலாம்” என நேரடியாக அவன் விஷயத்திற்கு செல்ல..

“அதுக்கு முன்னாடி உங்களுக்கு குடிக்க எடுத்துட்டு வர சொல்லறேன் மறுக்க கூடாது..” என அன்பாக சொல்ல ரிஷியும் பிகு செய்யாமல் அவர் வரவழைத்த பானத்தை அருந்திவிட்டு.. அவர் அழைத்த விஷயமாக பேச ஆரம்பித்தான். அவர் அவனை அவர்களின் லேபிற்கு அழைத்து சென்று காட்டினார்.. மிகவும் பரிதாபமான நிலையிலிருந்தது அது.. பின்னர் எவ்வளவு கணினி தேவைப்படும், லேப் ரெடி செய்ய இன்டீரியர் டிசைனர்ஸ் அவனே தேர்வு செய்ய அவர்களிடமும் காலில் பேசி இனி எதுவானாலும் பள்ளி ப்ரின்ஸ்பாலை தொடர்புக் கொள்ள சொல்லி, எவ்வளவு செலவு ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைக் கொள்ளாமல் வேலைகளை விரைவாக தொடங்க சொன்னான்.. தானத்தில் சிறந்த தானம் கல்வி தானம் என்பது ரிஷியின் கொள்கை. ஆதலால் மடமடவென காரியங்கள் முடிவாகின.

ரிஷியின் செயலாற்றும் திறனைக் கண்டு அவருக்கு ஒரே சந்தோஷம். “ரொம்ப நன்றி சார். இது வேனும் அது வேனும்நு எங்கள கேட்க வைக்காம.. நீங்களே பார்த்து முடிவெடுத்தது ரொம்ப பெரிய விஷயம்.. ரொம்ப நன்றி..” என அவர் மனமார கூற..

“பரவாயில்லை மேம் இதுல என்ன இருக்கு.. உங்களுக்கு வேற எந்த ஹெல்ப் இது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.